"இப்டியா போட்டு உடைக்குறது?".. விருந்தினர் முன்னிலையில் மணப்பெண் பத்தி மாப்பிள்ளை சொன்ன ரகசியம்.. 😍

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்றைய காலகட்டத்தில் நாம் சோஷியல் மீடியாவில் அதிக நேரத்தை உலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Advertising
>
Advertising

Also Read | வர்ணனையில் ஈடுபட்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீர் நெஞ்சு வலியா?.. வெளியான தகவலால் பரபரப்பான கிரிக்கெட் வட்டாரம்!!

அதிலும் குறிப்பாக, திருமணத்தை சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்கள் அதிகமாக மக்கள் கவனத்தை பெறவும் செய்யும். உதாரணத்திற்கு புதுமையான திருமண பத்திரிக்கை, போட்டோஷூட், திருமண மேடையில் நடக்கும் டான்ஸ், நண்பர்கள் கொடுக்கும் சர்ப்ரைஸான பரிசு என கல்யாணத்தை சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த நிலையில், திருமண நிகழ்வின் போது மணப்பெண் குறித்து விருந்தினர்கள் அனைவரின் முன்னிலையில் மாப்பிள்ளை சொன்ன யாருக்கும் தெரியாத ரகசியம், மணப்பெண்ணை முகத்தை மூட வைத்ததுடன் இணையத்திலும் அதிகம் வைரலாகி வருகிறது.

Ian Young என்ற வாலிபருக்கும் Katie என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அப்போது பேசிய மணமகன் இயான், கேட்டியுடனான முதல் டேட்டிங்கின் போது நடந்த சம்பவம் குறித்து விருந்தினர்கள் முன்னிலையில் பேசினார். முதல் முறையாக அவர்கள் இருவரும் கிரிக்கெட் கிளப் ஒன்றில் சந்தித்ததாக இயான் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்ணைப் பரிமாறி கொண்ட நிலையில், சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு ஹோட்டல் ஒன்றிற்கும் சென்றுள்ளனர். அங்கே உணவு வகைகளை வாங்கி கொண்டு கேட்டி அருகே திரும்பி இயான் வந்த போது அங்கே வேறொரு நபரை கேட்டி முத்தமிட்டு கொண்டிருந்ததை கவனித்ததாக இயான் கூறினார்.

இயான் அப்படி கூறியதும் அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க தொடங்க, மணமகளாக நின்ற கேட்டியும் முகத்தை மூடிக் கொண்டபடி சிரித்து கொண்டே நின்றார். முதல் டேட்டிங்கில் மனைவி செய்த விஷயத்தை அனைவர் முன்னிலையிலும் தெரிவித்த மாப்பிள்ளை தொடர்பான செய்தி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read  | 32 மணி நேரத்தில்.. 1857 கிலோ மீட்டர்.. காசி வரை பயணம் செய்து திரும்பி பாக்க வெச்ச தமிழக தம்பதி!!.. சுவாரஸ்ய பின்னணி

GROOM, BRIDE, GUEST, WEDDING, EXPOSES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்