திருமண மேடை வரை வந்த பிறகு.. மணப்பெண்ணுக்கு No சொன்ன மாப்பிள்ளை.. பரபரப்பை ஏற்படுத்திய காரணம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையின் அடுத்த கட்டம் தொடங்கும் நாளாக பலரும் பார்க்கிறார்கள்.

Advertising
>
Advertising

அப்படிப்பட்ட திருமண நிகழ்ச்சியை மிகவும் அமர்க்களமாக குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடத்துவார்கள்.

இந்நிலையில், திருமணம் மேடை வரை சென்ற பிறகு திடீரென நடந்த சம்பவம் ஒன்று பலரையும் அதிர்ந்து போக செய்துள்ளது.

துனிசியா நாட்டை சேர்ந்த இளைஞர், ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அவரையே திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் கூறி, அந்த பெண்ணின் புகைப்படத்தை தனது தாயாருக்கு காண்பித்துள்ளார். இதனைக் கண்ட அந்த இளைஞரின் தாய், திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் மிக மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில் திருமண நாளும் வரவே, புகைப்படத்தில் பார்த்த தனது மருமகளை முதன் முறையாக அன்று தான் நேரில் பார்த்துள்ளார் மணமகனின் தாயார்.

ஆனால், மருமகளை நேரில் பார்த்து விட்டு மாமியார் கூறிய கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமண நாளில் தனது மகனை அழைத்த தாயார், நீ பார்த்த பெண் கவர்ச்சியாக இல்லை என்றும் அவர் மிக குள்ளமாக இருக்கிறார் என்றும் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

தான் விரும்பும் பெண்ணை தாயார் நேரில் பார்த்து இப்படி கூறியதும் மறுப்பு தெரிவிக்காத மாப்பிள்ளை, திருமண மேடையிலேயே தான் விரும்பிய பெண்ணை தாயின் வாக்கை கேட்டு கைவிட்டுள்ளார். இதனால் அங்கிருந்த பலரும் மணமகளை குறித்து, அவதூறு கருத்துகளை பேசவே அந்த பெண்ணும், திருமண நாளில் கூனிக் குறுகி மனமடைந்து போயுள்ளார்.

அந்தப் பெண்ணின் பெயர்  Lamia Al-Labawi எனும் தெரிய வந்துள்ள நிலையில், மேடை வரை வந்து விட்டு, தனது திருமணம் நின்று போனது தொடர்பாக சமூக ஊடகத்தில் கவலையுடன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். மேடை வரை வந்து திருமணம் நின்று போனதால், தன்னை காண்பவர்கள் பலரும் தன்னை பற்றி ரகசியமாக புறம் பேசுவதாகவும், இதன் காரணமாக தான் அவமானமாக உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கென்று யாரும் இல்லை என்றும், அனாதையான நான் திருமணத்துக்கான பணச் செலவை தனியாளாக சேர்த்து, பார்த்து பார்த்து செலவு செய்ததாகவும் தற்போது திருமணம் நின்று போனதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து,  Lamia Al-Labawi-ன் பதிவு, அதிகம் வைரலாக மாறிய நிலையில், பலரும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

திருமண நாளில் தாய் வாக்கை கேட்டு, திருமணம் நிறுத்திய இளைஞர் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

BRIDE, GROOM, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்