‘வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டிரம்ப்’!.. நேரம் பார்த்து ‘கலாய்த்த’ கிரேட்டா.. ‘அவர் முகத்தை பார்த்தா அப்டியா தெரியுது’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டிரம்பை, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கிண்டலடித்து ட்வீட் செய்துள்ளார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க். அமெரிக்காவில் காலநிலை குறித்து நடந்த உச்சி மாநாட்டில் பரபரப்பாக பேசி உலக அளவில் அறியபட்டவர். இவரை 2019-ஆம் ஆண்டின் ‘பெர்ஸன் ஆஃப் தி இயர்’ (Person of the Year) என பாராட்டி டைம் பத்திரிகை வெளியிட்டிருந்தது.

அப்போது கிரேட்டாவை விமர்சித்த டிரம்ப், ‘இது அபத்தமானது. கிரேட்டா தனது கோபத்தைக் கட்டுப்படுத்த பயிற்சி எடுக்கவேண்டும். பிறகு ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்கு தனது நண்பருடன் செல்லவேண்டும். Chill Greta, Chill!’ என கேலி செய்து ட்வீட் செய்திருந்தார். இதனை அடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். மேலும் தேர்தலில் முறைக்கேடு நடந்திருப்பதாக கூறி, ட்விட்டரில் தனது கோபத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.

இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட கிரேட்டா, டிரம்ப் பயன்படுத்திய அதே வார்த்தைகளை பதிவிட்டு அவருக்கு பதிலடி கொடுத்தார். அதில், ‘இது அபத்தமானது. டிரம்ப் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த பயிற்சி எடுக்கவேண்டும். பிறகு ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்கு தனது நண்பருடன் செல்லவேண்டும். Chill Donald, Chill!’ என்று ட்வீட் செய்தார்.

இந்த நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறினார். இதுகுறித்து ட்வீட் செய்த கிரேட்டா, ‘அவரைப் பார்க்கும்போது மகிழ்ச்சியான வயதானவரைப் போல் தெரிகிறது. அவருக்கு பிரகாசமான மற்றும் அற்புதமான எதிர்காலத்தை எதிர்பார்க்கிறேன். இதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கிண்டல் அடிக்கும் விதமாக அவர் பதிவிட்டிருக்கிறார். கிரேட்டாவின் இந்த ட்வீட்டுக்கு டிரம்பால் பதிலளிக்க இயலாது. ஏனென்றால் அவரது ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்