'அந்த பொண்ணுக்கு பயம் இல்ல'...'ஒத்த பார்வையில உலக ட்ரெண்டிங்'... தெறிக்க விடும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்இளம் பெண் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், அமெரிக்க அதிபர் ட்ரம்பை பார்த்த அந்த ஒரு பார்வையால் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகி இருக்கிறார்.
சுவீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க். 16 வயதே ஆனா இந்த இளம் பெண், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். பருவநிலை மோசமடைந்து வருகிறது, எனவே பள்ளிக்கு செல்லவில்லை என்ற போராட்டத்தின் மூலம் உலக புகழ் பெற்றவர் தான் கிரேட்டா. உலகம் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது எனவே பருவநிலையை மாற்றத்தில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என பல்வேரு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஐ.நா.வில் நடைபெற்ற பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் கிரேட்டா தனது ஆக்ரோஷமான உரையை ஆற்றினார். அப்போது அவர் உலக தலைவர்களை கடுமையாக சாடினார். பருவநிலை மாற்றத்தில் உலக நாடுகள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும், உலகம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே ஐ.நா மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை தந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கிரெட்டா, ட்ரம்பை இறுக்கமான முகத்துடன் முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் ட்ரண்ட் அடித்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பல முக்கிய செய்தி தாள்களில் முக்கிய இடத்தை இந்த நிகழ்வு பிடித்திருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்