'இங்க வராதீங்க'!.. ஆப்கான் அகதிகளுக்கு "NO" சொல்லும் அண்டை நாடுகள்!.. அதுக்காக இப்படியா செய்றது?.. அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், கிரீஸ் நாடு செய்துள்ள ஒரு சம்பவம் உலக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பிரிவினர் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, 2015ல் நேர்ந்த அகதிகள் நெருக்கடி மீண்டும் ஏற்படலாம் எனும் அச்சம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எழுந்துள்ளது.

அப்போது, மத்திய கிழக்கைச் சேர்ந்த சுமார் ஒரு மில்லியன் பேர், துருக்கி வழியாக கிரீஸின் எல்லையைக் கடந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்தனர்.

கிரீஸில் குடிநுழைவுக் கொள்கைகள் தற்போது கடுமையாக்கப்பட்டதுடன், எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், கிரீஸ், துருக்கி உடனான அதன் எல்லையில், 40 கிலோமீட்டர் நீளமுள்ள சுவரை எழுப்பியுள்ளது. ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்து அகதிகள் பலர் கிரீஸுக்கு இடம்பெயரக்கூடும் என்பதால் அந்தச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்