'ஹலோ மை டார்லிங்' ... பேரன் கைக்கு கிடைத்த தாத்தா - பாட்டியின் காதல் கடிதங்கள் ... இத்தன வருசத்துக்கு அப்புறமா ?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வேல்ஸ் நாட்டில் தனது பாட்டி, தாத்தாவுக்கு எழுதிய காதல் கடிதங்கள் 72 ஆண்டுகளுக்கு பிறகு பேரனின் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது.

1948 ஆம் ஆண்டு பிட்டிக் மை வில்லியம்ஸ் என்பவர், 60 மைல் தொலைவிலுள்ள தனது காதலர் ஜோன்ஸ் என்பவருக்கு ஒரு மாதத்திற்கு மேலாக நாள்தோறும் கடிதங்களை எழுதியுள்ளார். இந்த கடிதங்கள் அனைத்தும் 'ஹலோ மை டார்லிங்' என்றே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மை வில்லியம்ஸ் மற்றும் ஜோன்ஸ் ஆகியோர் 1950 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் 72 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 46 கடிதங்கள் இவர்களின் பேரனான வேல்ஸ் நாட்டை சேர்ந்த கிரைக் ஜான்சன் கைக்கு வந்து சேர்ந்துள்ளது. மை வில்லியம்ஸ் மற்றும் ஜோன்ஸ் தம்பதியரின் மகள் எலென்னா ஜோன்ஸ். இவரின் ஒரே மகன் தான் கிரைக் ஜான்சன் ஆகும். இதுகுறித்து கிரைக் ஜான்சன் கூறுகையில், 'எனது தாயின் தோழி ஒருவர் வழியாக இந்த கடிதங்கள் குறித்து யாரோ பேஸ்புக்கில் பதிவிட்டதைக் கண்டு என்னிடம் தகவலை தெரிவித்தார். தொடர்புகொண்டு விசாரித்த போது இந்த கடிதங்கள் என் கைக்கு வந்து சேர்ந்தன' என்றார்.

கடிதங்கள் குறித்து கிரைக் ஜான்சன் மேலும் கூறுகையில், 'இந்த கடிதங்கள் என் கைக்கு வந்து சேர்ந்தது மகிழ்ச்சியான தருணமாக உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்த என் அம்மாவும் இப்போது உடனிருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும். எனது மகன்கள் இரண்டு பேரின் வருங்காலத்தில் இதனை பத்திரமாக வழி செய்துள்ளேன். அவர்களின் வயதான காலங்களில் தங்களது குடும்பத்தை நினைவில் கொள்ள இந்த கடிதங்கள் அவர்களுக்கு உதவும்' என பேரன்புடன் தெரிவித்தார்.

WALES, LOVE LETTERS

மற்ற செய்திகள்