‘ஒரே நாளில் கோடீஸ்வரரான தாத்தா..’ 8 வயது பேத்தியால் வந்த அதிர்ஷ்டம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் பேத்தியின் அதிர்ஷ்ட எண்களைப் பயன்படுத்தி முதியவருக்கு 2,385 கோடி ரூபாய் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

‘ஒரே நாளில் கோடீஸ்வரரான தாத்தா..’ 8 வயது பேத்தியால் வந்த அதிர்ஷ்டம்..

வடகரோலினா மாகாணத்தைச் சேர்ந்த சார்லஸ் டபிள்யூ ஜாக்சன் என்ற முதியவர் வியட்னாமிய உணவகத்திற்கு மனைவியுடன் சென்றுள்ளார். அங்கு தனது பேத்திக்காக எப்போதும் போல ஃபார்ட்ச்யூன் குக்கீஸ் வாங்கியுள்ளார். அதில் இருந்த எண்களின் அடிப்படையில் லாட்டரி வாங்கிய அவருக்கு அதிர்ஷ்ட வசமாக பரிசு விழுந்துள்ளது.

லாட்டரியில் பரிசாக அவருக்கு  இந்திய மதிப்பில் 2,385 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற பின் அவர் ஏற்கெனவே வேண்டிக்கொண்ட படி, இரண்டு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஒரு ராணுவ மருத்துவமனைக்கு தலா 10 லட்சம் டாலர்கள் நன்கொடை வழங்குவதாகக் கூறியுள்ளார்.

FORTUNE, COOKIE, US, LOTTERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்