VIDEO: 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாத்தா!... முக்கிய செய்தி சொல்ல ஓடோடி வந்த பேத்தி!'... கண்ணாடி ஜன்னல் வழியே... கண்ணீரில் மூழ்கடித்த பாசப் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட முதியவரை நேரில் சந்திக்க முடியாத அவரது பேத்தி தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதை ஜன்னல் வழியாக சொல்லும் புகைப்படம் பலரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,08,746 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,938 ஆக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த கொரோனாவால் மனதை உருக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், அமெரிக்காவில் அப்படியொரு மனதை கலங்கடிக்கும் சம்பவம் நடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான முதியவர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை நேரில் சந்திக்க முடியாத அவரது பேத்தி தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டத்து என நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டி கண்ணாடி ஜன்னல் வழியாக சொல்கிறார். இந்த புகைப்படம் பலரது மனங்களையும் வருடியுள்ளது.

இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், "எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதை என் தாத்தாவிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்தில் போன் வசதியும் இல்லை. அதனால், ஜன்னல் வழியாக பார்த்து சொன்னேன்" என வருத்தத்துடன் பதிவு செய்தார். 

இச்சம்பவத்தின் மூலம், கொரோனா போன்ற வைரஸ் கிருமிகள் மனித உயிர்களை அழித்தாலும், மனிதர்களுக்கு இடையிலான அன்பை அழிக்க முடியாது என்பது புலப்படுகிறது.

 

 

CORONAVIRUS, GIRL, GRANDFATHER, EMOTIONAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்