“இந்தியா போயி வந்ததுல இருந்து”.. “இந்த சங்காத்தமே வேண்டாம்”.. “இதான் நமக்கு ஈஸியா இருக்கு!”.. வைரல் ஆகும் ட்ரம்பின் செயல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அதிபர் ட்ரம்ப் அண்மையில் இந்தியா வந்தபோது அவர் நமஸ்தே என்கிற வார்த்தையை கற்றுக்கொண்டது பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது. 

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறருடன் கை குலுக்குதல் உள்ளிட்டவற்றை தவிர்க்கச் சொல்லி உலக நாடுகளும் சுகாதார மையங்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள செய்தி பரவலாகி வருகிறது. 

அதில், ‘I just got back from India. And I did not shake any hands there. And it's very easy, because they go like this’ என்று கூறிய ட்ரம்ப் வணக்கம் வைத்து காண்பித்துள்ளார். ‘இந்தியாவுக்கு சென்று வந்ததிலிருந்து நான் யாருடனும் கை குலுக்குவதில்ல. கொரோனா அச்சுறுத்தலால் அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின்போது இரு கைகளையும் கூப்பி இவ்வாறுதான் கூறினேன்’ என்று வணக்கம் வைத்து காண்பிக்கிறார் ட்ரம்ப். அதுவே தனக்கு எளிமையாக இருந்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இந்தியா வந்தபோது ட்ரம்ப்க்கு, இந்திய பிரதமர் மோடி நமஸ்தே என்கிற வணக்கம் சொல்லும் முறையை அறிமுகம் செய்துவைத்ததும், அப்போது மேடையில் பேசிய ட்ரம்ப் நமஸ்தே என்று முழங்கியதும் குறிப்பிடத்தக்கது. 

DONALD TRUMP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்