“மனுசங்க தோத்துடுவோம்... இதுங்க என்னமா செல்ஃபிக்கு போஸ் கொடுக்குதுங்க”!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மனிதர்கள் மட்டும் அல்ல, தற்போது கொரில்லாக்களும் செல்ஃபி புகைப்படங்களுக்கு பழகிவிட்டது.

இந்த புகைப்படம் காங்கோவில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது. இங்குதான் உலகில் அழிந்துவரும் மலை கொரில்லாக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள இந்த கொரில்லாக்களின்  பெற்றோர்கள் வேட்டையாடிகளால் கொல்லபட்டப் பின் இவை இரண்டும் மீட்கப்பட்டு இந்த பூங்காவில்தான் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த பூங்காவின் துணை இயக்குநர் இன்னசெண்ட் கூறியதாவது இந்த கொரில்லாக்களின் பெற்றோர்கள் 2007 ஆம் ஆண்டு இறக்கும் போது, இந்த இரண்டு கொரில்லாக்களினுடைய வயது 2 மற்றும்  4 என்று கூறியுள்ளார். மேலும், இந்த கொரில்லாக்கள் தங்களைப் பாதுகாவலர்கள் போல பாவனை செய்ய துவங்கிவிட்டதாகவும். மேலும்,  இந்த ரேஞ்சர்தான் தங்களுடைய பெற்றோர் என நம்ப தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், எனக்கு இதை பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறது. மேலும், எப்படி ஒரு கொரில்லா மனிதன் போல நிற்க முடியும் என்பதை ஆராய்ச்சி செய்து தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

GORILLA, SELFIE, VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்