அமெரிக்காவில் ‘இனவெறிக்கு’ எதிராக வலுக்கும் போராட்டம்.. கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை ‘அதிரடி’ ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவரை போலீசார் கொலை செய்த சம்பவம் குறித்து கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

அமெரிக்க நாட்டின் மினசோட்டா மாகாணத்தில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிலாய்ட் என்பவரை போலீசார் கொலை செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் கலவரங்கள் அதிகரித்து வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்த உயிரழப்புக்கு நீதி வேண்டி அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் கலவரங்கள் வெடித்ததை தொடர்ந்து 16 மாகாணங்களில் உள்ள 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் அருகிலும் போராட்டங்கள் அதிகரித்துள்ளதால், முதல்முறையாக வெள்ளை மாளிகையின் விளக்குகள் அனைத்தும் முற்றிலுமாக அணைக்கப்பட்டு அப்பகுதியே இருளில் மூழ்கியது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை ட்வீட் ஒன்று செய்துள்ளார். அதில்,‘சமூக வலைதளங்களான கூகுள், யூடியூப் ஆகியவை இன சமத்துவத்துக்கு ஆதரவாக எப்போதும் நிற்கும். ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் துணையாக இருக்கும். துக்கம், கோபம், சோகம் மற்றும் பயத்தை உணருபவர்களே, நீங்கள் தனியாக இல்லை. இன சமத்துவத்துக்கான எங்கள் ஆதரவையும், கறுப்பின சமூகத்துடன் ஒற்றுமையையும், ஜார்ஜ் ஃபிலாய்ட், பிரோனா டெய்லர், அஹ்மத் ஆர்பெரி மற்றும் குரல் இல்லாத மற்றவர்களில் நினைவாகவும் இதை பகிர்ந்து கொள்கிறோம்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்