“கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள், இதுக்கான பணத்த கொடுக்கணும்!”... சீறிய நாடு.. ‘ஒரே ஒரு எச்சரிக்கையில்’ க்ளீன் போல்டு ஆக்கிய கூகுள்!
முகப்பு > செய்திகள் > உலகம்செய்திகளைச் சேகரிக்கும் பணிகளுக்காகவும் அவற்றில் தரமான உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கும் ஊடக நிறுவனங்கள் ஏராளமான மனித வளத்தை மட்டுமல்லாது பணத்தையும் முதலீடு செய்கின்றன. ஆனால் செய்தி சேகரிப்பதற்கு கூகுளும், பேஸ்புக்கும் முதலீடு செய்ய வேண்டிய சூழல் இல்லை, எனினும் செய்திகளை வைத்து ஏறக்குறைய வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி டாலர் வருவாய் ஈட்டி வருவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இதை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று ஊடகங்களில் கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து செய்தி ஊடக நிறுவனங்கள் கூறும்போது, “இயற்கைப் பேரிடர்கள், மதக்கலவரங்கள், கொரோனா போன்ற சுகாதார அவசர நிலை என மக்களுக்கு தொடர்பான செய்திகளை பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து வழங்கி வரும் சூழலில் ஊடகத்துறையை சுரண்டும் வகையில் பேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்களும் கூகுள் மாதிரியான தேடுபொறி இணையதளங்களும் செயல்பட்டால் அது ஜனநாயகத்துக்கும் பொது ஒழுங்கிற்கும் நல்லதல்ல. எனவே பொது நலன் கருதி செய்திகளை வெளியிட ஊடகத்துறை அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்திகள் மக்களிடையே அவநம்பிக்கையையும் பீதியையும் உண்டாக்கும் சூழலில், போலி செய்திகளில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும்.
எனவே சமூக ஊடகங்கள், இப்படி தீ போல பரவும் போலி செய்திகளுக்கு பொறுப்பு ஏற்பதில்லை. இதற்கு முறையான நடவடிக்கையும் தீவிர பேச்சுவார்த்தையும் தேவை. முன்னதாக டிஜிட்டல் நிறுவனங்கள் வருவாயை கட்டாயமாக பகிர வைக்க பல முயற்சிகள் நடந்தன. எனவே வருவாய் பகிர்வு குறித்து, அவர்கள் ஊடக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதனையடுத்து உள்நாட்டு ஊடகங்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்குவதற்கு ஆஸ்திரேலிய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய நிதியமைச்சர்,, “ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் வெளியிட்டால் அதற்குரிய பணத்தை அந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டும். ஆனால் விளம்பரங்களில் வருவாய் இழப்பை சந்தித்துள்ள நம்நாட்டு ஊடகங்களின் செய்திகளை பயன்படுத்தி தங்கள் தளத்திற்கு பலரையும் கூகுள் ஈர்க்கிறது. எனவே செய்திகளுக்கு உரிய பணத்தை கூகுள் செலுத்த வேண்டும். ஏனென்றால் கூகுளில் 10% செய்தி தேடல்கள்தான் பயன்படுத்தப் படுகிறது.” என்று பேசியுள்ளார்.
இத்துடன் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களிடமிருந்து செய்திகளுக்கு கட்டணம் வசூலித்து வகை செய்யும் சட்ட மசோதாவை கொண்டு வருவதற்கும் ஆஸ்திரேலிய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இது சாத்தியமானால், கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் 6 பில்லியன் டாலர் விளம்பர வருவாயை ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்களுக்கு கொடுக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் ஆஸ்திரேலிய மக்களுக்கு திறந்த கடிதம் என்கிற எச்சரிக்கை செய்தியை வெளியிட்டு உள்ளது. அதில் செய்தி தகவல்களுக்கு கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டால் ஆஸ்திரேலியாவில் இலவச தேடல் என்கிற சேவையை அந்நாட்டு பயனாளர்கள் இழக்க இழக்க நேரிடும் என்று கூகுள் எச்சரித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Route பார்ப்பதற்காக 'Google Map'-ஐ திறந்த நபருக்கு... மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!.. எதைக் கண்டுபிடித்தார் தெரியுமா?
- 'பீர்ல இருந்து கரண்ட்...' 'அட, இந்த ஐடியா செமயா இருக்கே...' - மொதல்ல 1.5 லிட்டர் பீர வச்சு மின்சாரம் உற்பத்தி...!
- 'ரொம்ப நாள் அவன் கூட வாழ முடியாதுல...' 'கலங்கும் காதலி...' - 61 வயது மூதாட்டியை திருமணம் செய்யும் 27 வயது இளைஞன்...!
- 'சீனா'வுடன் தொடர்புடைய 2500 'யூ டியூப்' 'சேனல்'கள 'க்ளோஸ்' பண்ணி ... 'ஆப்பு' வெச்ச 'கூகுள்' - காரணம் என்ன??
- சுஷாந்த் கடைசியா Google-ல 'இதைத்தான்' தேடுனாரு... ஷாக் கொடுத்த கமிஷனர்!
- 'மோடி'யுடன் நடந்த உரையாடலுக்கு பின்!!... சும்மா மெர்சலான அறிவிப்பை வெளியிட்ட 'சுந்தர் பிச்சை'... "அடுத்த 5 வருஷத்துல 'இந்தியா'வுல பட்டைய கெளப்ப போறோம்"!!!
- 75 லட்சம் கோடி 'வருமானம்'... 11 நாடுகள்ல '36 லட்சம்' பேரை வேலை வாங்குறது... 58 'இந்தியர்'கள் தானாம்!
- இந்த '25' ஆப் உங்க போன்ல இருந்தா... உங்க 'ஃபேஸ்புக்' அக்கவுண்டுக்கு 'ஆப்பு' தான்... உடனே 'Uninstall' பண்ணுங்க... 'எச்சரிக்கிறது' கூகுள்!
- "டூயோ ஆப்ல இனிமே இப்படிதான்!"... கூகுள் அறிமுகப்படுத்திய அசத்தலான வசதி!
- பரபரக்கும் ‘H-1B’ விசா விவகாரம்.. கூகுள் CEO சுந்தர்பிச்சை ‘அதிரடி’ ட்வீட்..!