"என்னால தூங்க முடியல..படபடப்பா வருது"..கூகுள் மீது கர்ப்பிணி தொடுத்த வழக்கு..என்னதான் நடந்துச்சு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் மீது அதன் பணியாளர் ஒருவர் புகார் அளித்த வழக்கில் அபாரதத் தொகையை வழங்க கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கர்ப்பிணியாக இருக்கும் அந்த பெண் கூகுள் நிறுவனம் தன்னிடம் பாகுபாடு காட்டியதாக புகாரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
>
Advertising

உலக செஸ் சேம்பியனையே 39 மூவ்-ல் முடித்துவிட்ட தமிழக சிறுவன்..!

பாகுபாடு

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் செல்சி கிளாசன் தான் கருவுற்றதும் கூகுள் நிர்வாகம் தன்னிடம் பாகுபாடு காட்டியதாக புகார் ஒன்றினை அளித்தார். ஆரம்பத்தில் கூகுள் இந்த விஷயத்தை குறித்து பேசவே இல்லை. 2020 அக்டோபர் மாதம் நடந்த இந்த விஷயம் குறித்து புகார் அளித்தும் கூகுள் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்கிறார் கிளாசன்.

படபடப்பு

மேலும், கூகுள் நிர்வாகம் தன்னிடம் நடந்துகொண்ட விதம் தூக்கமின்மை, படபடப்பு, இருதய கோளாறுகள் மற்றும் உளவியல் பதிப்புகளை ஏற்படுத்தியதாக கிளாசன் தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இருந்தாலும், அவர் பாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து போதிய ஆவணங்களை கிளாசன் சமர்ப்பிக்கவில்லை.

இழப்பீடு

தனக்கு ஏற்பட்ட உளவியல் சிக்கல்களை கருத்தில் கொண்டு சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலரை இழப்பீடாக கூகுள் நிறுவனம் வழங்க வேண்டும் என கிளாஸன் தெரிவித்து இருந்தார். ஆனால், கூகுள் நிறுவனம் ஆரம்பத்தில் இதுபற்றி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இந்த வழக்கில் கிளாசனுக்கு செட்டில்மென்ட் வழங்க கூகுள் ஒப்புக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் இழப்பீடாக எவ்வளவு தொகையை கூகுள் கிளாசனுக்கு வழங்க இருக்கிறது என்பது இந்நேரம் வரையிலும் ரகசியமாகவே உள்ளது.

கூகுள் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் தொழிலாளர் நலன் மற்றும் உரிமைகளில் அந்தந்த நிறுவனங்கள் போதிய கவனம் செலுத்துவது தற்போதைய சூழ்நிலையில் மிக முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்  பிரான்சிஸ் ஹியூகன் என்பவரும் அந்த நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியது நினைவிருக்கலாம்.

அப்படி, கூகுள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தன்னிடம் பாகுபாடு காட்டியதாக அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திடீரென வீட்டிற்குள் இருந்து வந்த அலறல் சத்தம்.. ஓடி போய் பார்த்து துடிதுடித்து போன பெற்றோர்!

GOOGLE, GOOGLE EMPLOYEE, PREGNANT LADY, கூகுள், பணியாளர், கர்ப்பிணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்