‘ரஷ்யா-உக்ரைன் போர்’.. சர்ச்சையை கிளப்பிய Satellite போட்டோ.. Google maps கொடுத்த விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யாவின் பகுதிகள் சிலவற்றை கூகுள் மேப் ப்ளர் செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ‘கல்யாணம் ஆகி 15 நாள்தான் ஆச்சு’.. நண்பன் பிறந்தநாளை கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்..!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. அதில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனிடையே ரஷ்ய படைகள் கூகுள் மேப் (Google Maps) உதவியுடன் உக்ரைனில் வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து குறித்து அறிந்து தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் சேவையை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரஷ்யாவில் கனரக ஆயுதங்கள் நிறைந்து இருப்பதால் ரஷ்யாவின் பகுதிகள் சிலவற்றை கூகுள் மேப் ‘ப்ளர்’ (Blur) செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் கூகுள் மேப் இதற்கு விளக்கமளித்துள்ளது. அதில், ‘ரஷ்யாவின் எந்த பகுதியையும் கூகுள் மேப் மறைக்கவோ அல்லது ப்ளர் செய்யவோ இல்லை’ என தெரிவித்துள்ளது. இதன்முலம் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கு கூகுள் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 

Also Read | “2 மாசமோ இல்ல, ஒன்றரை மாசமோ சீக்கிரம் இதை பண்ணுங்க”.. கோலிக்காக களமிறங்கிய ரவி சாஸ்திரி..!

 

GOOGLE MAPS, RUSSIA, RUSSIA SATELLITE PHOTOS, ரஷ்யா-உக்ரைன் போர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்