இவ்வளவு நாள் கூகுள் மேப் யூஸ் பண்ணுறோம்.. இதை கவனிக்கலயே.. 36,000 ஆண்டு பழமையான ரகசிய குகை.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்கூகுள் மேப்பில் ரகசிய குகை ஒன்று புலப்படும் விடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read | "ரொம்ப மோசமா Feel பண்றேன்" .. எலான் மஸ்க் போட்ட புதிய திட்டம்..நடுங்கிப்போன ஊழியர்கள்..!
கூகுள் மேப்
புதிய பாதைகளை கண்டறிவது நம்முடைய வாழ்க்கையை எப்போதும் சுவாரஸ்யமாக மாற்றும். அப்படியான நெடுந்தூர பயணங்களின் போது பாதைகளை கண்டறிய ஆதிகாலம் முதலே மனிதன் புவியியல் வரைபடத்தை பயன்படுத்தி வந்தான். டெக்னாலஜி துறையில் மனித குலம் முன்னேற முன்னேற நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையும் அதற்க்கு ஏற்றாற்போல மாறின. அந்த மாற்றத்தின் விளைவாக தற்போது கூகுள் மேப் என்னும் டிஜிட்டல் வழிகாட்டி கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த மேப்பை பயன்படுத்திவருகின்றனர். உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இடங்களை விரல் அசைவில் நம்மால் காணவும் இது வழிவகுக்கிறது. சாலைகளை மட்டுமல்லாது தெருக்கள் மற்றும் வீடுகளையும் நம்மால் இந்த தொழில்நுட்பம் மூலமாக காண முடியும்.
அப்படித்தான் பிரான்ஸ் நாட்டின், தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சாவெட் குகைகளையும் சில வினாடி சுற்றுலா மூலம் நமக்கு காண்பிக்கிறது கூகுள் மேப் நிறுவனத்தின் இந்த பிரத்யேக வீடியோ.
வைரல் வீடியோ
கூகுள் மேப் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் 36,000 ஆண்டுகள் பழமையான குகைகள் இருக்கும் இடம் ஜூம் செய்யப்பட்டு காண்பிக்கப்படுகிறது. தெற்கு பிரான்சில் அமைந்துள்ள இந்த சாவெட் குகை அதன் தனித்துவமான ஓவியங்களுக்கு பெயர்போனது. இதற்குள் பழங்கால மனிதர்கள் வரைந்த ஏராளமான ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன.
குகையின் பாறைகளில் வரையப்பட்டுள்ள இந்த இந்த ஓவியங்கள், உலகின் முதல் கலை அருங்காட்சியமாக இருக்கலாம் என்கிறது UNESCO அமைப்பு.
சாவெட் குகை
பிரான்ஸ் நாட்டின் ஆர்டெச் நதிப் படுகையில் அமைந்துள்ள இந்த குகைகள், 1918 கண்டுபிடிக்கப்பட்டன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த குகை ஓவியங்கள் கலை வரலாற்றில் முக்கிய அங்கமாகும். இந்த இடத்தை ஐக்கிய நாடுகள் அவையின் UNESCO அமைப்பு, உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக கடந்த 2014 ஆம் ஆண்டு அங்கீகரித்தது. இந்த குகைகளின் சுவற்றில் 13 வகையான உயிரினங்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த வீடியோவை கூகுள் மேப் நிறுவனம் வெளியிட அது தற்போது வைரலாகி இருக்கிறது. இதுவரையில் இந்த வீடியோவை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
Also Read | “நம்பவே முடியல.. நேர்ல வந்த மாதிரியே இருக்கு”.. கல்யாண மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ரஷ்யா-உக்ரைன் போர்’.. சர்ச்சையை கிளப்பிய Satellite போட்டோ.. Google maps கொடுத்த விளக்கம்..!
- சிட்டிசன் படத்தின் அத்திப்பட்டி கிராமம் போல்.. கூகுள் மேப்பில் இருந்து காணமால் போன தீவு.. ஆய்வாளர்கள் அளித்த விளக்கம்
- திருநெல்வேலிக்கே அல்வா காட்டிய கூகுள் மேப்.. நம்பி போன லாரி .. கோயிலுக்குள் சிக்கி பரிதாபம்
- கூகுள் மேப் 'இந்த வழியா' தாங்க போக சொல்லுச்சு...! 'ஷார்ட் கட்னு நம்பி வந்த ஜெர்மன் டூரிஸ்ட்கள்...' - எப்படி வந்து சிக்கியிருக்காங்க பாருங்க...!
- 'ஆசையாய் வாங்கிய புத்தம் புதிய டாடா ஹாரியர் கார்'... 'கூகிள் மேப்பை நம்பி கண்மூடித்தனமாக இரவில் பயணம்'... எதிர்பாராமல் நடந்த அதிர்ச்சி!
- 'கூகிள் மேப்' யூஸ் பண்றவங்க இத கவனிச்சிங்களா'... 'ஆண்ட்ராய்டு'க்கு மட்டும் தான்... 'ஐஓஎஸ்'க்கு இல்ல!