'சீனா'வுடன் தொடர்புடைய 2500 'யூ டியூப்' 'சேனல்'கள 'க்ளோஸ்' பண்ணி ... 'ஆப்பு' வெச்ச 'கூகுள்' - காரணம் என்ன??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஷேரிங் பிளாட் ஃபார்மான யூ டியூப் தளத்தில் சீனாவுக்கு தொடர்புடைய 2500 யூ டியூப் சேனல்களை முடக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

யூ டியூப் தளத்தில் சீனாவுக்கு ஆதரவாக பொய்யான தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை கூகுள் நிர்வாகம் விசாரித்த நிலையில், கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சீனாவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 2500 யூ டியூப் சேனல்கள் தவறான தகவலை பரப்பியதன் காரணமாக அவை முடக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த சேனல்கள் அனைத்தும் அரசியல் தொடர்பான பொய்யான தகவல்களை பரப்பியதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது. மேலும் தேவையற்ற கண்டெண்ட்களை அதிகம் பதிவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதுகுறித்து அமெரிக்காவில் அமைந்துள்ள சீன தூதரகம் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த குற்றச்சாட்டை மட்டும் சீனா மறுத்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தலின் போது அரசியல் குறித்த பொய்யான தகவல்கள் வீடியோக்களாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோக்கள் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது போன்ற அரசியல் குழப்பங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, அவ்வப்போது யூ டியூப் மற்றும் ஃபேஸ்புக் தங்களது கொள்கைகளை மேம்படுத்தி வருகின்றன. அதன் காரணமாகவே சீனா தொடர்பான வீடியோக்கள் மற்றும் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்