1500 வருச பழைய கப்பிலில் இருந்து கிடைத்த ‘தங்க’ மோதிரம்.. அந்த கல்லில் யாரோட ‘உருவம்’ இருக்கு தெரியுமா..? ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மோதிரத்தைப் பார்த்து ஆய்வாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Advertising
>
Advertising

இஸ்ரேல் நாட்டின் அருகில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு இருந்தே செசேரியா துறைமுகம் இயங்கிவந்தது. இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வீசிய புயல் காரணமாக அந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்கள் கடலில் மூழ்கின.

தற்போது அங்கு தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்போது கப்பலில் இருந்து ரோமப் பேரரசு கால வெள்ளி மற்றும் வெண்கல நாணயங்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

அந்த நாணயங்களுக்கு மத்தியில் பச்சை கல் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில் இயேசுவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

GOLDRING, JESUS, ISRAEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்