இதென்னடா தங்கத்துக்கு வந்த அதீத மவுசு.. தென்னை மரத்துல தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுற கதையால்ல இருக்கு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய சூழலில் குறிப்பாக தமிழகத்தில் தங்கத்தை தங்களது மரபு சார்ந்த பெருமைக்குரிய விஷயமாக மக்கள் கருதுகின்றனர். இதனால், தங்கத்தின் விலை கிடுகிடுவென ஏறினாலும் திருமணம், காது குத்து என எவ்வித விசேஷங்களுக்கும் மக்கள் தங்களது வாங்கும் பொருட்களின் லிஸ்டில் தங்கத்தை முதன்மையாக வைத்திருக்கின்றனர். இதனாலேயே உலக அளவில் தங்க இறக்குமதியில் தொடர்ந்து இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Advertising
>
Advertising

ரூ‌. 1000 உரிமை தொகை.‌. நகை கடன் தள்ளுபடி சான்றிதழ்.. திடீரென வேகம் எடுக்கும் திமுகவின் அரசியல் டிராக்?

இந்நிலையில், இன்று தங்க விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து ரூ.4738 க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ. 37904-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 40832-க்கு விற்பனையாகிறது.

என்ன காரணம்?

இந்தியாவில் சர்வதேச தங்க விலையுடன் ஒப்பிட்டே தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். இந்தியாவில் இறக்குமதி வரியும் தங்கத்திற்கு விதிக்கப்படுவதால் விலை எப்போதுமே அதிகரித்துக் காணப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளில் ஏற்படும் சச்சரவுகள், இயற்கை பேரிடர் உள்ளிட்ட அவசர காரணங்களில் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்களின் நடவடிக்கை தங்க விலைஏற்ற இறக்கத்தின் நேரடிக் காரணமாக அமைந்து விடுகிறது.

இப்போது என்ன சிக்கல்?

ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிரிமியாவில் தொடர்ந்து ரஷ்யாவின் ஆதிக்கம் இருந்து வருகிறது. ஒரு பக்கத்தில் ரஷ்யாவையும் மற்றொரு பக்கத்தில் ஐரோப்பிய நாடுகளையும் எல்லையாக கொண்டுள்ள கிரிமியா பகுதியில் தங்களது ஆதிக்கம் எப்போதும் இருக்க வேண்டும் என ரஷ்யா நினைக்கிறது.

ஆனால், உக்ரேன் நாடு கிரிமியா பகுதியில் அதிக ஆர்வம் காட்டிவருகிறது. இதனால், உக்ரேனுக்கும் ரஷியாவிற்கும் இடையே ஏற்பட்டுவந்த பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது. சமீப காலங்களில் இரு நாடுகளின் நடவடிக்கை காரணமாக அப்பகுதியே போர்மேகம் சூழ்ந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் அமைப்பில் உக்ரேன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தது. இது ரஷ்யா - உக்ரேன் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையில் பெட்ரோலை ஊற்றியுள்ளது என்றே சொல்லவேண்டும்.

அதிகரித்துவரும் போர்ப் பதற்றம் காரணமாக அமெரிக்க, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

இந்தியர்கள் வெளியேறலாம்

உக்ரேனில் வசித்துவரும் இந்தியர்கள் அவசியம் இல்லாத பட்சத்தில் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்றும் முக்கிய காரணங்கள் அன்றி இந்தியர்கள் உக்ரேனுக்கு தற்போது பயணிப்பதை ஒத்திவைக்கலாம் என்றும் உக்ரேனில் உள்ள இந்தியர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது இந்திய தூரகம்.

போர்.. விளைவு..

ரஷ்யா - உக்ரேன் இடையேயான இந்த போர் பதற்றத்தின் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ரயில்வே டிராக்கில் இருசக்கர வாகனத்துடன் சறுக்கிய நபர்..100 கிமீ வேகத்தில் வந்த ரயில்.. கதிகலங்கும் வீடியோ..!

GOLD RATE, GOLD RATE HIKE, RUSSIA, UKRANE ISSUE, சர்வதேச தங்க விலை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்