1000 கிலோ வெங்காயம் அனுப்பி பழிவாங்கிய முன்னாள் காதலி.. "இப்படியும் ஒரு காதலனா?".. 'அப்படி என்ன சொன்னாரு?'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனுக்கு ஆயிரம் கிலோ வெங்காயத்தை பரிசாக அனுப்பிய சம்பவம் இணையத்தில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து அதற்கு அந்த காதலனின் ரியாக்‌ஷனும் வைரலாகி வருகிறது.

Advertising
Advertising

காதல் தோல்வியால் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை காதலனும் அனுபவிக்கவேண்டும் என்று கருதி வித்தியாசமான முடிவினை கையிலெடுத்தார். சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் ஜாவோ. இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஜானியாங் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பிறகு இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து சீனாவில் கடைபிடிக்கப்படும் காதலர் தினத்தன்று தனது முன்னாள் காதலனுக்கு, அதாவது ஜானியாங்கிற்கு  வித்தியாசமான பரிசு ஒன்றை ஜாவோ அனுப்பியுள்ளார். அதன்படி பல கடைகள் ஏறி இறங்கி 1000 கிலோ வெங்காயத்தை வாங்கி, அதை பரிசாக அனுப்பி அதில் ஒரு கடிதத்தையும் இணைத்து அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்தில், “நான் கடந்த பல நாட்களாக கண்ணீர் வடித்து வருகிறேன். இப்போது நான் அனுப்பிய இந்த வெங்காயத்தால், சிறிது நீயும் கண்ணீர் விடு” என்று ஜாவா குறிப்பிட்டிருந்தார். இந்த செய்திகள் அண்மையில் வெளியாகின. ஆனால் இந்த சம்பவத்தில் நடந்த மற்றுமொரு ஆச்சரியமான விஷயம்தான், இதுகுறித்து ஜானியாங் அளித்த அந்த பதில். ஆம், “ஜாவா பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. அவள் அனுப்பிய வெங்காயத்தால், நானும் அழப்போவதில்லை. ஆனால் தற்போது எனக்கு இருக்கும் ஒரே சிந்தனை எல்லாம் இந்த வெங்காய மூட்டைகளை எப்படி விற்று காசு சம்பாதிக்கலாம் என்பதுதான்” என்று பதில் கூறியுள்ளார். ஜானியாங்கின் இந்த பதிலைக் கேட்டால் ஜாவோ மேலும் கண்ணீர் சிந்துவது என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்