'11 வயது'.. 'ஒரே வருடத்தில் பலாத்காரம் செய்த 500 பேர்.. ஒரு இரவில் மட்டும் 10 பேர்'.. நடுங்கவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டனின் டெல்ஃபோர்டு மாகாணத்துக்கு உட்பட்ட 40 வயது பெண்மணி ஒருவர் தனக்கு நேர்ந்த மோசமான பாலியல் பலாத்கார கொடுமைகளை பத்திரிகைகளில் பகிர்ந்ததை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணி வருகிறது.
பெண்கள் பாலியல் தொல்லை அல்லது பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிரான குரல்களை #MeToo போன்ற ஹேஷ்டேகுகளின் கீழ் பல பெண்களும் பதிவு செய்தனர். ஆனால் 11 வயதில் இருந்து 19 வயது வரை தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை 40வது வயதில் பெண்மணி ஒருவர் வெளியில் சொல்லியிருக்கிறார்.
அதன்படி, உறவினர் வீட்டில் வளர்ந்த தன்னை 1980களில், அதாவது தனது 11 வயதில் வேறொரு ஆணின் கைகளில் ஒப்படைத்ததாகவும், அதன் பின்னர், சிறுமியாய் இருந்த தன்னை, அந்த நபர் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்ததோடு, பல ஆண்களின் பாலியல் இச்சைக்கு இரையாக்கியதாகவும், இப்பெண்மணி கூறியுள்ளார்.
எனினும் இவற்றில் இருந்தெல்லாம் தப்பி, தனது 14 முதல் 16 வயதுக்கிடையே பள்ளி சென்றபோது முறையான வருகை இல்லாததால் ஆசிரியர் புறக்கணித்ததாகவும், பின்னர் தனது 19வது வயதில், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக தான் அளித்த புகாரை எடுத்துக் கொள்ளாமல், தனது நடத்தையை தவறானதாகக் கருதி, காவலர்கள் தன்னை கைது செய்ததாகவும் அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
1980லிருந்து 1989 வரையிலான ஆண்டுகளில், சராசரியாக ஒரு இரவில் 10 ஆண்களும், குறிப்பாக தனது 11வது வயதில் தன்னை சுமார் 500 ஆண்களும் தன்னை பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், இதில் பல துப்பாக்கி முனையில் நிகழ்ந்ததாகவும் அப்பெண்மணி தற்போது அளித்துள்ள வாக்குமூலம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
‘சிறுமி கையில் என்ன வைத்திருக்கிறார் எனத் தொடங்கிய ஏலத்தில்’.. ‘ரூ.177 கோடிக்கு விற்பனையான ஓவியம்’..
தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் மனைவி மர்ம மரணம்..! தற்கொலையா..? பெற்றோர் போலீசில் புகார்..!
- 'இனியாச்சும் இவங்கள தண்டியுங்க ப்ளீஸ்!'.. பலாத்காரம்' செய்தவர்கள் பெயரை 'மணிக்கட்டில் எழுதிவிட்டு' பெண் எடுத்த 'சோக' முடிவு!
- 'ஐஸ்கிரீம் வாங்கச் சென்ற சிறுமிக்கு'... 'ஆசை வார்த்தைக் கூறிய'... கடைக்காரரால் நேர்ந்த சோகம்'!
- ‘செல்ஃபி மோகத்தால்’.. ‘புதுமணப்பெண் உட்பட 4 பேருக்கு நடந்த பரிதாபம்’..
- ‘2 குழந்தைகளுடன் கணவர் அனுப்பிய புகைப்படம்’.. ‘பதறியடித்து ஓடிவந்த மனைவி’.. ‘அதற்குள் நடந்துமுடிந்த விபரீதம்’..
- 'ஹலோ.. யாருகிட்ட?'.. 'தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கங்க'.. தூள் தூளாய் பறந்த அதிகாரிகளின் கேமரா!
- 'எல்லாம் ஓகேதான்.. அதுக்காக.. WEDDING DRESS-அ இங்கெல்லாமா போட்டுக்கிட்டு போவாங்க?'.. வைரலாகும் ஃபோட்டோ!
- ‘பல வருஷமா ஹாஸ்பிட்டல் வாசலில் பிச்சை’.. திடீர் ‘கோடீஸ்வரி’ ஆன பாட்டிம்மா..!
- பாலியல் 'தொல்லை' கொடுத்த கண்டக்டர்..ஓங்கி 'அறைந்த' பெண்..போலீஸ் புகார்!
- ‘குழந்தையின் முகத்தில்’.. ‘சிகரெட் புகையை ஊதியபடி ஃபேஸ்புக் லைவ்’.. ‘தாயின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்’..