‘22 வயது பெண் செய்த காரியம்!’... இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டதும்’.. உடனே ட்ரேஸ் செய்து ‘நேரில்’ வந்த போலீஸ்!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட பெண் ஒருவரை போலிசார் அதிரடியாக பிடித்துள்ளனர்.

சேனல் தீவுகளில் ஒன்றான ஜெர்சி தீவைச் சேர்ந்த Carys Ann Ingram என்கிற 22 வயதான பெண் மான்செஸ்டரில் கல்வி பெற்று வந்துள்ளார். இவர் மான்செஸ்டரில் இருந்து ஜெர்சி தீவுக்கு பயணம் செய்துள்ளார். ஆனால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக ஹோட்டல் ஒன்றுக்கு சென்றதுடன் நண்பர் ஒருவரின் வீட்டிற்கும் சென்றதோடு ஷாப்பிங் மாலுக்கும் சென்றுள்ளார்.
இதனிடையே இவர் பயணித்த விமானத்தில் இவருடைய அருகில் அமர்ந்து இருந்தவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததை அடுத்து, Carys Ann Ingram-ஐ தொடர்பு கொண்ட அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு எச்சரித்தனர். 8 நாளுக்குப்பின் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.
ஆனால் அதன்பின் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியாததால் அதிகாரிகள் அவரை தேடி வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் வீட்டிலும் இல்லை. இந்த நிலையில்தான் அவர் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றது, ஹோட்டலில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பின் தெரிய வந்தது.
அந்த புகைப்படத்தை வைத்து அவரை ட்ரேஸ் செய்த அதிகாரிகள் அவர் இருக்கும் இடத்தை விரைந்து சென்று அடைந்து சுய தனிமைப்படுத்துதல் விதிகளை மீறியதற்காக அவருக்கு 6,600 பவுண்டுகள் அபராதம் விதித்தனர். அந்த தொகையை கட்டவில்லை என்றால் அவர் 24 வாரங்கள் சிறை செல்ல நேரிடும் என்றும் அறிவுறுத்தினர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின் இன்றைய (26-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- சக்கையாக பிழிந்து எடுத்த கொரோனா ஊரடங்கு... சோர்ந்து போன ஊழியர்களுக்கு... நிறுவனங்கள் இன்ப அதிர்ச்சி!.. அதிலும் 'இந்த' பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு டாப்!
- 'நவம்பர் 2-ஆம் தேதி ஆஸ்ட்ரோசென்கா தடுப்பூசி ரெடி...' 'ஹாஸ்பிட்டல்ல வந்து போடலாம்...' - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மருத்துவமனை...!
- ‘நிம்மதியா ஷாப்பிங் பண்ணுங்க’.. ‘ஒரு பயலும் செயினை பறிக்க முடியாது!’.. ‘திருடர்களுக்கு டஃப் கொடுக்கும்’ சென்னை சிட்டி போலீஸின் புதுமுயற்சி!
- 'தொலைக்காட்சி நடிகை கையும் களவுமாக கைது!'.. 'பொறிவைத்து காத்திருந்த போலீஸார்!'.. 'போதைப் பொருள் வாங்கிய அடுத்த நொடியே ஆப்பு!'..
- 'எனக்கு 'கொரோனா' இல்ல'... 'ஆனாலும் லைட்டா பயமா இருக்கு'... இப்படி பயப்படுகிறவர்களுக்காக 12 நிமிடத்தில் பரிசோதனை முடிவு!
- ‘நெஞ்சுல பாலை வார்த்தீங்க!’.. ‘கொரோனா’ அடிச்ச ‘அடியில்’ இருந்து ‘மீண்டு விடுவோம்’ எனும் ‘நம்பிக்கை’ தரும் ஐடி, வணிக நிறுவனங்களின் அதிரடி ‘முடிவுகள்!’
- "இந்தியர் ஒவ்வொருத்தருக்கும் 'இவ்வளவு' செலவு ஆகும்!.. ஆனா, அதப்பத்தி கவலைப்படாதீங்க!".. கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய அரசு 'அதிரடி' அறிவிப்பு!
- மறுபடியும் முதல்ல இருந்தா..! கட்டுக்கடங்காமல் அதிகரித்த ‘கொரோனா’.. மீண்டும் ‘ஊரடங்கை’ அறிவித்த நாடு..!
- கொரோனா தொற்று உறுதி!.. எக்மோ கருவியின் மூலம்... தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு!