ஆத்தாடி இவ்ளோ பெரிய பாம்பா?.. வைரலான வீடியோ.. கூகுள் மேப் ரகசியத்தை உடைத்த அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கூகுள் மேப்-ல் தெரியும் பிரம்மாண்ட பாம்பு ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

கூகுள் மேப்

புதிய பாதைகளை கண்டறிவது நம்முடைய வாழ்க்கையை எப்போதும் சுவாரஸ்யமாக மாற்றும். அப்படியான நெடுந்தூர பயணங்களின் போது பாதைகளை கண்டறிய ஆதிகாலம் முதலே மனிதன் புவியியல் வரைபடத்தை பயன்படுத்தி வந்தான். டெக்னாலஜி துறையில் மனித குலம் முன்னேற முன்னேற நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையும் அதற்க்கு ஏற்றாற்போல மாறின. அந்த மாற்றத்தின் விளைவாக தற்போது கூகுள் மேப் என்னும் டிஜிட்டல் வழிகாட்டி கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த மேப்பை பயன்படுத்திவருகின்றனர். உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இடங்களை விரல் அசைவில் நம்மால் காணவும் இது வழிவகுக்கிறது. ஆனால், இதே கூகுள் மேப் மூலமாக சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது.

வைரல் வீடியோ

googlemapsfun என்னும் டிக்டாக் குழுவில் கடந்த 24 ஆம் தேதி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பிரான்ஸ் கடல் பகுதியில் பிரம்மாண்ட பாம்பின் எலும்புக்கூடு தெரிகிறது. இதுகுறித்து அந்த வீடியோவில்," மக்கள் இதனை மிகப்பெரிய பாம்பு என நம்புகிறார்கள். முன்பு பிடிக்கப்பட்ட பாம்பு அனைத்தையும் விட இது பெரியது" என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் புவியில் முன்னொரு காலத்தில் வாழ்ந்ததாக சொல்லப்படும் டைட்டனோபோவா என்னும் ராட்சத பாம்பின் பிரிவாக இது இருக்கலாம் எனவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரையில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.

 

உண்மை என்ன?

இந்த பாம்பு எலும்புக்கூடு பற்றிய விசாரணையில் பலரும் இறங்கியுள்ளனர். உண்மையில் அது நிஜ பாம்பின் எலும்புக்கூடு அல்ல. அது ஒரு உலோக சிற்பம் என தெரியவந்திருக்கிறது.  "Le Serpent d'Ocean என்று அழைக்கப்படும் இந்த சிற்பம் பிரான்சின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இதன் நீளம் 425 அடி ஆகும்.

Estuaire கலைக் கண்காட்சியின் ஒரு பகுதியாக Le Serpent d'Ocean 2012 இல் கட்டப்பட்டுள்ளது. இது சீன-பிரெஞ்சு கலைஞர் ஹுவாங் யோங் பிங் என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். உலகின் மிகப்பெரிய பாம்பு என கருதப்பட்டது உண்மையில் கலை சிற்பம் தான்.

 

TIKTOK, SNAKE, VIRALVIDEO, கூகுள்மேப், பாம்பு, வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்