“அடிச்சுது யோகம்!” - கொரோனா டயத்துல இப்படி ஒரு முடிவு எடுத்த அரசு.. ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வேலையில்லா திண்டாட்டத்தை தவிர்ப்பதற்காக ஜெர்மனி அறிமுகப்படுத்தியுள்ள Kurzarbeit திட்டம், பொருளாதார வல்லுனர்களால் வெற்றிகரமாகத் வெற்றிகரமான திட்டம் என வர்ணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2008-2009 காலகட்டத்தில் உலகம் முழுவதும் நிதிப் பிரச்சினை உண்டானபோது அமலுக்கு வந்த இந்த திட்டத்தை மீண்டும் ஜெர்மனி கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியருக்கு வேலை இல்லை என்று சொல்லி வீட்டிற்கு அனுப்ப கூடாது.

அத்துடன் அவர்களது வேலை நேரம் மட்டுமே குறைக்கப்படும். அதனால் பணியாளருக்கு ஏற்படும் இழப்பை அரசே முன்வந்து வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் வழக்கமாக பெறும் சம்பளத்தில் 60 சதவீதத்தை பெறுவார்கள். அத்துடன் தான் வேலை பார்த்த நேரத்துக்கான முறையான ஊதியத்தையும் பெறுவார்.

அதேசமயம் வேலை நேரம் 30 சதவீதம் குறையும் போது ஊதிய இழப்பை கணக்கு செய்தால் 10 சதவீதம் மட்டுமே வரும். கொரோனா பரவும் காலகட்டத்தை பொறுத்து 4வது மாதத்தில் 70 சதவீதமாகவும் ஏழாவது மாதத்தில் இருந்து 80 சதவீதமாகவும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்