எனக்கு மனுஷங்க மாதிரி 'முகத்த' வச்சுருக்க பிடிக்கல.. 12 லட்சம் செலவானாலும் பரவா இல்ல.. இளைஞர் எடுத்த அதிரடி முடிவு

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெர்மனி: ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மனிதர்கள் போன்று தோற்றமளிக்க விரும்பாததால் ரூ.12 லட்சம் செலவு செய்து தன்னுடைய தோற்றத்தை விநோதமாக மாற்றியுள்ளது அனைவரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

முன்பெல்லாம் பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள அதிக மெனக்கேட்டார்கள். தற்போது ஆண்களும் அதிகம் செலவு செய்து தங்களை கவர்ச்சியாக காட்டிக் கொள்கிறார்கள்.  அதற்காக பலரும் அழகு நிலையங்களுக்கு செல்வது உள்ளிட்ட பல காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.  ஆனால் விசித்திரமாக ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் மனிதரை போல தோற்றமளிக்க விரும்பாத காரணத்தினால் பல லட்சம் செலவு செய்து தன்னுடைய அழகு முகத்தை அமானுஷ்யமாக மாற்றியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வித்தியாசமாக இருக்க வேண்டும்:

28 வயதான இளைஞர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினோதமான போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் முகத்தில் puzzle போன்ற வடிவத்தில் பல நிறங்களில் பச்சை குத்தியுள்ளார், அதுமட்டுமல்லாமல் காது மற்றும் மூக்குகளில் ஓட்டையிட்டு அணிகலன்களை அணிந்துள்ளார்.  மேலும் தன்னுடைய வெள்ளை பற்களில் டைட்டானியத்தால் ஆன சாயத்தை பூசி கொடூரமாக மாற்றியுள்ளார்.

இது அனைத்தையும் விட இன்னும் தன்னுடைய இரு கண்களுக்கும் வேறொரு வண்ணத்தில் சாயம் பூசியுள்ளார், கண்களின் வெள்ளைப் பகுதியில் கருப்பு நிற மைக்கொண்டு டாட்டு போட்டுள்ளார்.  மேலும் இவர் தன் நாக்குகளை இரண்டாக பிளந்து, பாம்பின் பிளவுபட்ட நாக்கு போல செய்துள்ளார். இந்த விசித்திர தோற்றத்தை உருவாக்க இதுவரை ரூ .12 லட்சம் செலவு செய்துள்ளார்.

நீண்ட நாள் விருப்பம்:

இதுபற்றி அவர் கூறும்போது, "உடலில் மாற்றம் செய்வதில் எனக்கு நீண்ட நாட்களாக விருப்பம் இருந்து வந்தது.  பிற மனிதர்கள் போல் இல்லாமல் தனித்துவமாக இருக்க எண்ணினேன்.  நான் விரும்பியபடியே என்னால் என் உடலை மாற்ற முடியும், அதற்காக மற்றவர்கள் செய்வது போல நான் செய்யாமல், என்னை பார்த்து மற்றவர்கள் மாற வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.

நாக்கை பிளக்கும் சிகிச்சை:

அதிலும், முதன் முதலாக நான் எனது நாக்கை இரண்டாக்கும் முறையை நான் தான் பண்ணியுள்ளேன், ஆயினும் இந்த உடல் மாற்றத்தில் நான் இன்னும் முழு திருப்தி அடையவில்லை, மேலும் எதிர்காலத்தில் நான் என் உடலில் மாற்றங்களை கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டிருப்பேன்" என தெரிவித்துள்ளார்.

 

GERMANY, FACE, RS 12 LAKH, ஜெர்மனி, ரூ.12 லட்சம், முகம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்