100 கோடிகளுக்கு குவிந்த ஆர்டர்... அந்த 'தடுப்பூசி' எங்களுக்கு வேணாம்... ஒதுங்கும் 'வல்லரசு' நாடுகள்... என்ன காரணம்? வெளியான 'புதிய' தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் முதல் தடுப்பூசியை தயாரித்து விட்டதாக ரஷ்யா பெருமையுடன் அறிவித்துள்ளது. ஆனால் மனித பரிசோதனையை முழுமையாக முடிக்காமல் ரஷ்யா தடுப்பூசி உற்பத்தியை தொடங்கி விட்டதாக உலக சுகாதார அமைப்பு, உலக விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மறுபுறம் ரஷ்யாவின் இந்த தடுப்பூசியை வாங்குவதற்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் 100 கோடி ரூபாய் கொடுத்து ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த தடுப்பூசி குறித்து அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் கேள்வியெழுப்ப ஆரம்பித்து உள்ளன.

ஜெர்மனி

ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து, '' மக்களுக்கு பாதுகாப்பான தடுப்பூசி வழங்குவது தான் எங்களது நோக்கம். முதலில் ஊசி போட வேண்டும் என்பது அல்ல,'' என தெரிவித்து இருக்கிறார்.

பிரிட்டன்

ரஷ்யாவின் இந்த தடுப்பூசிக்கு பிரிட்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சண்டே டெலிகிராப் நாளிதழ், ''ரஷ்யாவின் தடுப்பூசியை பிரிட்டன் பயன்படுத்தாது. ஏனெனில் மருத்துவரீதியாக முறைப்படி பரிசோதனை செய்த தடுப்பூசியை தான் பயன்படுத்த வேண்டும் என்பது பிரிட்டன் நாட்டின் கொள்கை,'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் நிபுணர் கூறுகையில், '' பரிசோதனையை முடிக்காமல் ரஷ்யா இவ்வளவு வேகமாக தடுப்பூசியை கொண்டு வந்தது நம்பிக்கை அளிக்கவில்லை. கடைசி நபரும் பாதிக்கப்படவில்லை என்பதை முழுமையாக அறிவதற்கு முன்பாக ரஷ்யா தடுப்பூசி விநியோகம் தொடங்கியது சரியல்ல,'' என தெரிவித்து இருக்கிறார்.

இந்தியா

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், ''தடுப்பூசி தொடர்பான தேசிய நிபுணர் குழு, 12ம் தேதி (இன்று) நடத்தும் ஆய்வுக் கூட்டத்தில், ரஷ்ய தடுப்பூசி பற்றி விவாதிக்கப்படும். தடுப்பூசியை கொண்டு வருவது, சரியாக பங்கு பிரித்து அனுப்புவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும். அனைத்து மாநில அரசுகள், மருந்து உற்பத்தியாளர்களுடன், தேசிய தடுப்பூசி நிபுணர் குழு பேச்சுவார்த்தை நடத்தி, ரஷ்ய மருந்தை கொள்முதல் செய்வதா? என்பது பற்றி முடிவெடுக்கும், '' இவ்வாவறு ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்