'மறுமடியும் மொதல்ல இருந்தா?'.. 'இது வேலைக்கு ஆகாது!'.. 'போடுறா இன்னொரு லாக்டவுனை'!.. ஜூன் 29-ஆம் தேதி வரை நீட்டித்த 'நாடு!'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வராததால் மீண்டும் ஜூன் 9-ஆம் தேதி வரை கட்டுப்பாட்டு விதிமுறைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

Advertising
Advertising

கொரோனாவின் பாதிப்புகளிலிருந்து ஜெர்மனி தப்பவில்லை. இதுவரை, 1 லட்சத்து 80 ஆயிரம் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள ஜெர்மனியில் 8 ஆயிரத்து 400 பேர் பலியாகியுள்ளனர்.  இந்த நிலையில் கொரோனா கட்டுக்கொண்டு வரப்பட்டதாக நினைத்து ஜெர்மனி தமது கட்டுப்பாட்டு முறைகளை படிப்படியாக தளர்த்தியது. ஆனால் சிறிது நாட்கள் மறைந்திருந்த கொரோனா, மீண்டும் சமூகத் தொற்றாக பரவி தலைதூக்கத் தொடங்கியது.

இதனால் அதிர்ந்து போன ஜெர்மனி மீண்டும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வரும் ஜூன் 29ம் தேதி வரை கொரோனாவுக்கு எதிரான சமூக இடைவெளி, தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் உள்ளிட்ட இதர கட்டுப்பாட்டு விதிகளை நீட்டித்துள்ளது.  மேலும் ஜெர்மனியின் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்