8 நாளா பையன காணும்.. வடிகால் மூடிக்கு மேலே நடந்த பாதசாரிக்கு கேட்ட சத்தம்.. "அதிர்ஷ்டம் பண்ணிருக்கோம்" - பெற்றோர் நெகிழ்ச்சி.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் குழந்தைகள் ஆழ்துளை கிணறு, வடிகால்களில் விழக்கூடிய விஷயம் சகஜமாக நடப்பதை காண முடிகிறது.

Advertising
>
Advertising

Also Read | 24 மணிநேரத்துல அடுத்தடுத்து 21 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்..கடும் அச்சத்தில் அந்தமான் மக்கள்..!

அலட்சியம் காரணமாகவும், அஜாக்கிரதை காரணமாகவும் சில சமயம் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது ஜெர்மனியில் ஜோ என்கிற எட்டு வயது சிறுவன் ஒருவன் எட்டு நாளைக்கு முன்பு காணாமல் போய் இருக்கிறான். சிறுவனை தேடி வந்த பெற்றோர், கொஞ்ச நாளில் சிறுவன் கிடைக்கவில்லை என்றதும் கிட்டத்தட்ட சிறுவனுக்கு எதோ ஆகிவிட்டது என்று முடிவு செய்து நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

இதனிடையே ஜெர்மன் புற நகர் பகுதியில் பாதசாரி ஒருவர் நடந்து செல்லும் பொழுது சாக்கடை மூடி இருந்துள்ளது. யாரோ ஒரு சிறுவன் உள்ளிருந்து விம்மி விம்மி அழும் சத்தத்தை அந்த பாதசாரி கேட்டிருக்கிறார் உடனடியாக அவர் போலீசாரிடத்தில் தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீசார் சாக்கடை மூடிக்கடியில் இருந்து சிறுவனை மீட்டெடுத்தனர். 

அப்போதுதான் எட்டு நாட்களாக காணாமல் போயிருந்த சிறுவன்தான் அவன் என்பது பலருக்கும் தெரிய வந்தது. மழைநீர் வடிகாலுக்காக அமைக்கபட்டு மூடப்பட்ட இந்த சாக்கடை மூடிக்கு கீழே சிறுவன் எப்படி சென்றான் என்பது குறித்து பொலீஸார் விசாரித்து வருவதுடன் சிறுவனுக்கு முதற்கட்டமாக மருத்துவ முதலுதவியை செய்து வருகின்றனர்.

எட்டு நாட்களாக காணாமல் போயிருந்த சிறுவன் மழை நீர் வடிகாலுக்காக அமைக்கப்பட்டு மூடப்பட்ட சாக்கடை மூடிக்கு கீழ் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதை அவருடைய பெற்றோர்கள் பெரும் அதிர்ஷ்டமான ஒன்றாக கருதுகின்றனர். மேலும் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டதற்கு அவர்கள் நெகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Also Read | ஜிம்மில் இருந்த பாடி பில்டர்.. திடீர்ன்னு சுருண்டு விழுந்து உயிரிழந்த துயரம்.. போலீசார் விசாரணையில் காத்திருந்த கடும் அதிர்ச்சி

GERMANY 8 YR OLD BOY, SEWER, ALIVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்