இது 'என்ன'ன்னு தெரியுதா...? 'ஒரு காலத்துல இத வச்சு அவ்ளோ விஷயங்கள் நடந்துருக்கு...' - இப்போ கடலுக்கு அடியில இருந்து கெடச்சிருக்கு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இரண்டாம் உலகபோரின் போது ஜெர்மானியர்கள் பயன்படுத்திய எனிக்மா குறியாக்க இயந்திரம் (Enigma encryption machine) பால்டிக் பெருங்கடல் பகுதியிலிருந்து மீன் பிடி வலையில் சிக்கியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹிட்லரின் நாஜி கும்பல் யூதர்கள் மீது படையெடுத்த மாபெரும் இன அழிப்பு சம்பவம் உலகின் இரண்டாம் உலகப்போர் என குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து, இரண்டாம் உலகப் போரின்போது குறியிடப்பட்ட செய்திகளை அனுப்ப நாஜிக்கள் பயன்படுத்திய எனிக்மா குறியாக்க இயந்திரம் (Enigma encryption machine) பால்டிக் பெருங்கடல் பகுதியிலிருந்து மீன் பிடிக்க சென்ற ஜெர்மன் டைவர்ஸ்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு ஜெர்மனியில் உள்ள கெல்டிங் விரிகுடாவில் கைவிடப்பட்ட மீன்பிடி வலைகளைத் தேடியபோது, ​​இந்த புகழ்பெற்ற எனிக்மா குறியாக்க இயந்திரம் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பால்டிக் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எனிக்மா இயந்திரத்தில் உள்ள உப்பு படிவை நீக்கம் செய்ய (desalination) முழுமையாக நிறைவடைய 'ஒரு வருடம் ஆகும்' என ஜெர்மனியின் ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீன் பிராந்தியத்தில் உள்ள மாநில தொல்பொருள் அலுவலகத்தின் தலைவர் உல்ஃப் இக்கரோட் கூறியுள்ளார். ஜெர்மன் போர்க்கப்பலிலிருந்து எனிக்மா இயந்திரம் வீசப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிடுள்ளார்.

                                             

எனிக்மா இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட குறியீடுகளை டிக்ரிப்ட் செய்ய நேச நாட்டுப் படைகள் அயராது உழைத்தன, ஒவ்வொரு எனிக்மா தகவல்களும் 24 மணி நேரத்திற்கும் ஒரு முறை மாற்றப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய கண்டுபிடிப்பை தற்பொழுது அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தும் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்