‘2 பேருக்கு மேல ஒன்று கூடக் கூடாது!’.. ‘பிரதமருக்கே வொர்க் ஃப்ரம் ஹோம்!’.. ‘அட்டூழியம் செய்யும் கொரோனா!’
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஜெர்மனியில் இரண்டு நபர்களுக்கு மேல் ஒன்று கூடக் கூடாது என்கிற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரானா பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதோடு 192 நாடுகளில் இதுவரை 3 லட்சத்து 36 ஆயிரத்து 75 பேரை தாக்கியுள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 613 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலியில் நேற்று ஒருநாளில் 651 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்காவில் 116 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஸ்பெயினில் ஆயிரத்து 756 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97 ஆயிரத்து 636 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இது நிலையில் ஜெர்மனியில் கொரோனா பரவலை தடுப்பதற்கான பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உணவகங்களில் அமர்ந்து உண்ணும் நடைமுறை தடை செய்யப்படுவதாகவும், முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். மேலும் பொது இடங்களில் இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவதற்கு, அடுத்த 2 வாரங்களுக்கு அவர் தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவருடன் ஆலோசனை நடத்திய பிறகு, தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளவும் செய்துள்ளார் பிரதமர் ஏஞ்சலா மெர்கல். இதனால் அலுவல் பணிகளை அவர் வீட்டில் இருந்து மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 3 ‘தமிழக’ மாவட்டங்கள் உட்பட... நாடு முழுவதும் ‘75 மாவட்டங்கள்’... ‘மார்ச் 31’ வரை முற்றிலும் ‘முடக்கம்’...
- ‘இந்தியாவில்’ கொரோனாவால் மேலும் ஒருவர் ‘பலி’... ‘ஊரடங்கு’ காலத்தை ‘நீட்டித்து’ மாநில அரசுகள் ‘புதிய’ உத்தரவு...
- கொரோனாவால் 'எல்லாம் முடிஞ்சுது' என நினைத்த கூலி தொழிலாளி!... சொந்த ஊருக்கு திரும்பிய போது... காத்திருந்த அதிர்ச்சி!... ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனது எப்படி?
- ‘கொரோனா’ அச்சுறுத்தலால்... ‘மார்ச் 31’ வரை அனைத்து பயணிகள் ‘ரயில்’ சேவை ‘ரத்து’... ‘விவரங்கள்’ உள்ளே...
- BREAKING: 'தமிழகத்தில் நாளை காலை வரை மக்கள் ஊரடங்கு!'... தமிழக அரசு அதிரடி!
- 'என்ன நடந்தாலும் கேப்டன் முன்னிலையில தான் கல்யாணம் பண்ணுவோம்!'... மணமக்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த விஜயகாந்த்!
- 'காலம்காலமா நம்ம முன்னோர்கள் பண்ணிட்டு இருந்ததுதான்...' 'நச்சு கிருமிகள் எதுவும் வீட்டுக்குள்ள வராம இருக்க தெளிக்கிறோம்...' மஞ்சள் நீரை வாசலில் தெளிக்கும் கிராமத்து பெண்கள்...!
- இன்று நாடு முழுவதும் 'சுய ஊரடங்கு'...! 'கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சோதனை முயற்சி...' வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தல்...!
- ‘இத்தாலியில் கொரோனாவின் கோரம்’... ‘நிரம்பி வழியும் மருத்துவமனைகள்’... ‘உலகையே நடுங்க வைக்கும் இறப்பு எண்ணிக்கை’!
- ‘அவனுக்கு கொரோனா வந்துருச்சு’... ‘சக ஊழியர்கள் அனுப்பிய வீடியோவால்’... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'!