'வாரிசு இல்லாமல் இறந்துபோன பணக்கார தம்பதி'!.. 'சொத்து மதிப்பு' மட்டும் இவ்ளோவா? .. 'கொடுத்து வெச்ச' அக்கம் பக்கத்தினர்.. 'காரணம்' இதுதான்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியில் வாரிசு இல்லாமல் பெண்மணி ஒருவர் இறந்து போனதை அடுத்து அவருடைய சொத்துக்கள் உள்ளூர் மக்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஜெர்மனியின் Hesse அருகே உள்ள Waldsolms என்கிற பகுதியில் என்கிற பெண்மணி Renate Wedel தனது கணவர் Alfred Wedel என்பவருடன் 1975 முதலே வாழ்ந்து வந்த நிலையில் பங்குச்சந்தையில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்த Alfred Wedel 2014ஆம் ஆண்டு இறந்து போனார். பின்னர் Renate, Frankfurtல் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் 2016 முதல் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
பின்னர் Renate தனது 81வது வயதில் கடந்த 2019ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய சொத்துக்களுக்கு ஒரே வாரிசாக இருந்த அவருடைய சகோதரி ஏற்கனவே இறந்து விட்டிருந்தார். இதனால் Renate உடைய சொத்துக்கள் முழுவதும் அப்பகுதியில் உள்ளோருக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த பகுதி மக்கள் இதனால் Renate குடும்பத்துக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களை கவுரவிக்கும் வகையில் அந்த மக்கள் சார்பில் அவர்களது சொத்தாகிய 6.2 மில்லியன் யூரோக்களை சாலைகளில் சைக்கிள் செல்வதற்காக தனிப்பிரிவு அமைப்பது, கட்டடங்கள் கட்டுவது, மழலையர் பள்ளி கட்டுவது என செலவிடலாம் என்று மக்கள் ஆலோசனை தெரிவித்து இருக்கின்றனர்.
இன்னும் சிலர் நீச்சல் குளம், பொதுப் போக்குவரத்து மற்றும் சிறுவர்களுக்கு உதவக்கூடிய அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு அந்த பணத்தை செலவிடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்