மொத்தமாக '10 ஆயிரம்' பேரை.. பணிநீக்கம் செய்யும் 'பிரபல' நிறுவனம்.. 'கலக்கத்தில்' ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்தம் காரணமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை கொத்துக்கொத்தாக வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

இந்தநிலையில் பென்ஸ்-மெர்சிடஸ் கார்கள் தயாரிப்பு நிறுவனமான டைம்லர் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஜெர்மனியின் டைம்லர் நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிந்து வரும் நிலையில் வரும் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிக்கன நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு அளிக்கும் சம்பளத்தில் சுமார் 10 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தவும், எதிர்காலத்தில் நவீனரக கார்களை உருவாக்கிட முதலீடு செய்யவும் டைம்லர் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இதனை மனதில் கொண்டு முன்கூட்டியே ஊழியர்களுக்கு ஓய்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வழியாக ஆட்குறைப்பு செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து ஆட்டோமொபைல்  துறை நஷ்டத்தை சந்தித்து வருவதால் ஆட்குறைப்பு, தொழிற்சாலைகளை மூடுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுப்பது வாடிக்கையாகி விட்டது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்