வினாடிக்கு 575 கிலோமீட்டர் வேகம்.. பூமியை நெருங்கும் பிரம்மாண்ட சூரியப்புயல் - ஆய்வாளர்கள் வெளியிட்ட பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சூரியனில் இருந்து வெளிப்பட்ட சக்தி வாய்ந்த சூரிய புயல் இன்று பூமியை தாக்கலாம் என எச்சரித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சூரிய புயல்
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய நட்சத்திரமான சூரியன் தற்போது தனது 11 வது சூரிய சுழற்சியில் உள்ளது. அணுக்கள் ஒருங்கிணைவதால் உருவாகும் கணிசமான வெப்பமே சூரியன் தொடர்ந்து ஒளிர காரணமாக அமைந்திருக்கிறது. இந்த அதீத வெப்பம் காரணமாக சில சமயங்களில் சூரியனின் வெளிப்புற பரப்பில் இருந்து வெடிப்பு ஏற்பட்டு சூரிய துகள்கள் மற்றும் மின்காந்த அலைகள் பிற கிரகங்களை நோக்கி தள்ளப்படும். இதனை கொரோனல் மாஸ் எஜெக்ஷன் என்கிறார்கள். மேலும் இது சூரிய புயல் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் சூரியனின் வெளிப்புறத்தில் ஏற்பட்ட கொரோனல் மாஸ் எஜெக்ஷன் இன்று பூமியை தாக்கலாம் என எச்சரித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த சூரிய காரணமாக விண்வெளியின் தட்பவெப்பநிலை பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 20,69,834 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் வீசலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
CESSI
இதுகுறித்து இந்தியாவை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமான CESSI," எங்களுடைய ஆய்வின் அடிப்படையில் ஏப்ரல் 14, 2022 அன்று 429-575 கிமீ/வி வேகத்தில் பூமியின் அருகே சூரியப்புயல் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் லேசான முதல் மிதமான மின்காந்த இடையூறுகள் இருக்கலாம். பூமிக்கு அருகே உள்ள விண்வெளியில் சூரிய காற்று (solar wind) மற்றும் தட்பவெட்ப நிலை சீரான நிலையில் இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக சூரியனின் AR2987 புள்ளியில் இருந்து வெளிப்பட்ட கொரோனல் மாஸ் எஜெக்ஷனை நாசாவின் சோலார் டைனமிக்ஸ் ஆய்வகம் உறுதி செய்திருந்தது. இது G2 வகை மின்காந்த புயலை உருவாக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சூரிய புயல் செயற்கை கோள்களை பாதிக்கும் என்பதால் தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளில் இடையூறு ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இன்று சூரிய புயல் தாக்கலாம் என தகவல்கள் வெளியானதை அடுத்து விண்வெளி ஆய்வு அமைப்புகள் அதுகுறித்த கண்காணிப்பில் இறங்கியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 10 நாள் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ள 3 தொழிலதிபர்கள்..கட்டணம் எவ்வளவு தெரியுமா?
- "500 டன் வெயிட்டு.. இந்தியா மேல விழுந்தா என்ன பண்ணுவீங்க..?" தூக்கிவாரிப் போட வைக்கும் ரஷ்யாவின் பரபரப்பு கேள்வி..!
- 40 சாட்டிலைட்டும் காலி.. விண்வெளியில் நடந்த சம்பவம்.. 750 கோடி நஷ்டத்தில் எலான் மஸ்க்..!
- நாசாவின் அடுத்த பிரம்மாண்ட திட்டம்.. விண்வெளி வீரர்களுக்கு வித்தியாச பயிற்சி.. - வைரல் புகைப்படம்..!
- விண்வெளி'லயும் சாப்பாடு தான் பிரச்சன போல.. முழிக்கும் நாசா.. ஐடியா குடுத்தா 7.4 கோடி ரூபாய் பரிசு குடுக்குறாங்களாம்
- வெடித்து சிதறிய 'ராட்சஸ' நட்சத்திரம்.. சூரியனை விட 10 மடங்கு பெருசு.. பால்வழி அண்டத்தில் உருவாகியுள்ள பாதிப்புகள்!
- பூமிக்கு அருகில் வரவிருக்கும் சிறுகோள் - பாதை கொஞ்சம் மாறினா.. அவ்வளவுதான் நாசாவின் பகீர் அறிவிப்பு..!
- ஏலியன்களை எதிர்கொள்ள ‘பூசாரி’-யை நியமனம் செய்துள்ள நாசா..!- பயிற்சிக்காக என விளக்கம்!
- விண்வெளியில் 'உடலுறவு' வச்சிக்க முடியுமா...? 'ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு...' - 'ஷாக்' தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்...!
- பூமிக்கு பக்கத்துல இப்படியொரு ‘கோள்’ இருக்கா..! உள்ள மட்டும் என்ன இருக்குன்னு தெரிஞ்சா ‘தலை சுத்தி’ போயிருவீங்க.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்..!