"தூங்க விடாம சத்தம் போட்டுட்டே இருக்கு!!".. தீவிர சிகிச்சைபெற்று வந்த சக நோயாளியின் வென்டிலேட்டரை ஆஃப் பண்ணிய 72 வயது மூதாட்டி.. ஷாக் ஆன மருத்துவர்கள்.

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெர்மனி மன்ஹெய்ம் (Mannheim ) நகரில் மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Image Credits : Axel Heimken/AFP via Getty Images

Also Read | தன்னை போல இருக்கும் பெண்ணை கொன்று.. தற்கொலை நாடகமாடிய இளம்பெண்.. காதலனுடன் பகீர் பிளான்!!.. தலை சுற்ற வைத்த பின்னணி!!

ஆம்,  மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ஒரு மூதாட்டி, தன்னுடன் அதே அறையில் தங்கி சிகிச்சைபெற்று வந்த இன்னொரு மூதாட்டியை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஜெர்மனியின் தென்மேற்கு நகரம் மன்ஹெய்ம். இங்குள்ள மருத்துவமனை ஒன்றில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த மூதாட்டிக்கு வயது 72 ஆகிறது. இவர்தான், தான் சிகிச்சை பெற்று வந்த அதே அறையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 79 வயதான மற்றொரு மூதாட்டியின் வெண்டிலேட்டரை ஆஃப் பண்ணியுள்ளார். ஆம், உடல்நல பிரச்சனைகள் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த அந்த 79 வயது மூதாட்டிக்கு வென்டிலேட் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருந்திருக்கிறது.

நோயாளியின் சுவாச செயல்முறைக்கு சப்போர்ட் செய்து, நுரையீரலுக்குள் காற்றை செலுத்தும் கருவிதான்  இந்தவென்டிலேட்டர். பொதுவாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வைக்கப்படும் இந்த கருவிதான், அந்த 79 வயதான மூதாட்டிக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால்  அந்த வென்டிலேட்டர் டிவைஸ் எழுப்பிய சத்தம், அங்கு சக நோயாளியாக அருகில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இந்த 72 வயதான மூதாட்டிக்கு மிகவும் எரிச்சலூட்டும் வகையில் தொந்தரவாக இருந்துள்ளதாக தெரிகிறது.  இதனால், சத்தம் போட்ட அந்த டிவைஸை, அந்த 72 வயது மூதாட்டி ஆஃப் செய்துள்ளார். அதன் பின்னர் அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள்தான், 79 வயது மூதாட்டிக்கு இருந்த வென்டிலேட்டர் சப்போர்ட் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருப்பது கண்டு அதிர்ந்துபோய் மீண்டும் ஆன் செய்துள்ளனர்.

மேலும் இதை செய்தது அந்த 72 வயது மூதாட்டிதான் என்பதை அறிந்த அவர்கள் வென்டிலேட்டரின் முக்கியத்துவம் குறித்து அந்த 72 வயது மூதாட்டியிடம் எடுத்து கூறி அறிவுரை செய்துவிட்டு சென்றுள்ளனர். ஆனாலும் அன்று இரவு மீண்டும் வென்டிலேட்டர் எழுப்பிய சத்தத்தால் கோபமுற்ற அந்த 72 வயதான மூதாட்டி திரும்பவும் அந்த 79 வயது மூதாட்டியின் வென்டிலேட்டரை ஆஃப் செய்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் சிறிது உடல்நலம் சீராக இல்லை என்றால், அந்த 79 வயதான மூதாட்டியின் உயிருக்கு எந்த ஆபத்தும் உண்டாகவில்லை. அதே சமயம் அவருக்கு மேற்கொண்டு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உண்டானது. இத்தனைக்கும் காரணமான அந்த 72 வயது மூதாட்டி, டாக்டர்கள் பொறுமையுடன் எச்சரித்தும் இப்படி செய்ததால், கொலை முயற்சியின் பேரில் இப்படியான காரியத்தில் ஈடுபட்டதாக சந்தேகித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்து நீதிபதி அந்த மூதாட்டியை விசாரணை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "சம்பளம் ₹1.03 கோடி.. ஆனா வேலையே கொடுக்க மாட்டேங்குறாங்க".. கோர்ட்டுக்கு போன ஊழியர்.. யாரு சாமி இவரு..?

GEMRANY, HOSPITAL, PATIENT, VENTILATOR, MANNHEIM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்