அவங்களுக்கு 'கடிவாளம்' போட்டே ஆகணும்...! நாம எல்லாரும் சேர்ந்து 'அந்த நாட்டுக்கு' எதிராக குரல் எழுப்புவோம்...! - ஜி-7 மாநாட்டில் முடிவு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மூன்று நாட்கள் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் மாநாட்டில் சீனாவுக்கு கடிவாளம் போடும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய 7 வளர்ந்த நாடுகளின் கூட்டம் லண்டனில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில், வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை வழங்க அனைத்து நாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். மேலும் சீனாவின் சந்தை சாராத பொருளாதார கொள்கைகளை எதிர்கொள்ளவும் ஏழு நாடுகளின் தலைவர்கள் உறுதி மேற்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என ஜி-7 தலைவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க ஜி-7 மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அப்போது, ஜி-7 நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, இதர உலக நாடுகளின் தலைவர்களும் சீனாவுடன் பொருளாதார ரீதியாக போட்டியிட வேண்டும் எனவும், அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்து சீனாவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜி-7 மாநாட்டின் முடிவில் எலிசபெத் மகாராணியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி சந்தித்து உரையாடினர். அரண்மனையில் நடந்த விருந்திலும் அவர்கள் கலந்துக்கொண்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்