இதை பண்ணிட்டு தாராளமா ‘மாஸ்க்’ போடாம வெளியே வாங்க.. அமெரிக்க அரசு ‘அதிரடி’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 16 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 33 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பொது இடங்களில் முக்ககவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. மேலும், 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஆனாலும், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளான மருத்துவமனைகள், பொது போக்குவரத்து, விமானங்கள், விமான நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் வீடுகள் இல்லாத தங்கும் இடங்களில் தொடர்ந்து முக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை இன்னும் செலுத்திக் கொள்ளாதவர்கள், ஒரு டோஸ் மட்டுமே செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தி இரண்டு வாரங்கள் நிறைவடையாதவர்கள் கட்டாயம் முகக்கவசம் தொடர்ந்து அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்