ரொம்ப ஆபத்தான 'ஓமிக்ரான்' வைரஸ்...! '32 தடவ உருமாற்றம் அடைஞ்சிருக்கு...' இதை கண்டுபிடிக்க 'என்ன' வழி...? - 'அதிர' வைக்கும் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கேப்டவுன் : தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் மீதான அச்சம் ஆப்பிரிக்க நாடுகளை தாண்டி, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அச்சம் அதிகரித்துள்ளது. இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளும் ஓமிக்ரான் வைரஸை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர யோசித்து வருகிறது. ஏற்கனவே பல ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துவிட்டன.
ஓமிக்ரான் ஏன் ஆபத்தானது?
உலகம் முழுக்க தற்போது 110-க்கும் அதிகமான நபர்களுக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்டாவை விட இது அதிக முறை உருமாற்றம் அடைந்துள்ளது. மொத்தம் 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால் தான் இது அதிக ஆபத்து கொண்டதாக உள்ளதாக உலக சுகாதார மைய விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸின் பெயர் என்ன?
B.1.1.529 என்பது தான் ஓமிக்ரான் கொரோனா வைரஸின் பெயர். அதை பற்றி அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவர் பிரியா சம்பத்குமார் கூறும் போது, இந்த ஓமிக்ரான் கொரோனா முதலில் கண்டறியப்பட்டது தென்னாப்பிரிக்காவில். போட்ஸ்வானாவில் முதலில் கண்டறியப்பட்டது. நவம்பர் 9-ம் தேதி கண்டறியப்பட்டது. சரியாக ஓமிக்ரான் கண்டறியப்பட்டு 3 வாரங்கள் ஆகிவிட்டன. இது நீண்ட காலம். கவலை அளிக்க கூடிய கொரோனா கவலை அளிக்க கூடிய கொரோனா
உலக சுகாதார மையம் என்ன சொல்கிறது?
கடந்த 26ம் தேதி உலக சுகாதார மையம் கவலை அளிக்க கூடிய கொரோனா வகை என்று அறிவித்தது. ஏகப்பட்ட உருமாற்றங்கள் இருப்பது ஓமிக்ரான் கொரோனா வகையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஓமிக்ரான் வைரஸ் பெல்ஜியம், போஸ்ட்வானா, ஜெர்மனி, ஹாங்காங், இஸ்ரேல், இத்தாலி, யுகேவில் இந்த ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. சில இடங்களில் டெல்டா வகையை விட வேகமாக பரவுகிறது. இதற்கு முன் எந்த வகையான கொரோனாவிற்கும் டெல்டா வகையை விஞ்சும் ஆற்றல் இல்லை. இது மட்டுமே டெல்டாவை விஞ்சி உள்ளது. எனவே இது ஆபத்தானது ஆகும்.
நிறைய உருமாற்றம்
ஓமிக்ரான் வைரஸில் ஸ்பைக் புரோட்டின்களில் நிறைய உருமாற்றம் ஏற்பட்டுள்ளதால், உடலில் உள்ள கொரோனா எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி ஆற்றல், போன்றவை ஓமிக்ரான் கொரோனாவிற்கு எதிராக வேலை செய்யாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
தெரிய வேண்டிய உண்மை
தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா பரவிய பலருக்கு வேக்சின் போடப்படவில்லை. பலருக்கு ஒரு முறை மட்டுமே வேக்சின் போடப்பட்டுள்ளது. 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்களே ஓமிக்ரான் வைரஸால் அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று புதிய அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை.
உலக நாடுகள் என்ன திட்டம்?
உலக நாடுகள் இன்னொரு பெரிய அபாயத்தை எதிர்கொள்ள தயாராக இல்லை. எப்படியாவது தங்கள் நாட்டிற்குள் தென் ஆப்பிரிக்கா உள்பட ஓமிக்ரான் கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து பயணிகள் வருகைக்கு தடை விதிக்கவே விரும்புகின்றன. அமெரிக்கா. ஐரோப்பா, யு. கேவில் பல நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெளிநாட்டு பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் சோதனைகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்தியா சர்வதேச விமான பயணிகள் சேவையை தொடருவது சந்தேகம் என்கிற நிலை உள்ளது.
முழுமையான தகவல் இல்லை
ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவக்கூடியதா அல்லது அதிக ஆபத்தானதா என்று இன்னும் முழுமையாக நமக்கு இதுவரை தெரியவரவில்லை. ஓமிக்ரான் கொரோனா பரவலை குறைக்க வேண்டும் என்றால் அதிக அளவில் தடுப்பூசி போடுவது நல்லது என்கிறார்கள். ஏனெனில் தென் ஆப்பிரிக்காவில் தடுப்பூசி போடாதவர்கள், ஒரு டோஸ் மட்டுமே போட்டவர்களுக்கு அதிகம் பாதித்து இருப்பது ஆரம்ப கட்ட தகவலாக தெரிகிறது. எனவே தடுப்பூசி போடுவது நல்லது.
தடுப்பூசி முக்கியம்
இன்னும் நம்மை விட்டு கொரோனா போகவில்லை எனவே மாஸ்க் அணிய வேண்டும். டெஸ்டிங்கை உயர்த்த வேண்டும். சர்வதேச அளவில் வேக்சின் போடும் அளவை அதிகரிக்க வேண்டும். ஜீன் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். எம்ஆர்என்ஏ வேக்சினில் ஓமிக்ரான் கொரோனா ஏற்றபடி வேகமாக மாற்றத்தை செய்ய முடியும் என்றாலும் பாதி உலக மக்களுக்கு இப்போது இருக்கும் வேக்சினே சென்று சேரவில்லை. எல்லோருக்கும் வேக்சின் சேரும் வரை யாருமே பாதுகாப்பானவர்கள் என்று சொல்ல முடியாது.
எப்படி கண்டுபிடிப்பது?
பிசிஆர் டெஸ்ட் மூலமே ஓமிக்ரான் கொரோனாவை கண்டறிய முடியும். ஜீன் சோதனை செய்வதன் மூலம் இதை உறுதி செய்யவும் முடியும். ராபிட் ஆண்டிஜன் சோதனை மூலம் ஓமிக்ரான் கொரோனாவை கண்டறிய முடியுமா என்று உறுதியான தகவல் இல்லை.
மற்ற செய்திகள்
பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குங்க.. ஆதரித்த பெண் எம்பிக்கள்.. நாடு பெயர் தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க!
தொடர்புடைய செய்திகள்
- புதிய 'ஒமிக்ரான்' வைரஸ் வேற கண்டுபிடிச்சிருக்காங்க...! இந்தியால 'மூணாவது' அலைக்கு வாய்ப்பு இருக்கா...? - மருத்துவ நிபுணர் தெரிவித்த 'முக்கிய' தகவல்...!
- கோவாக்சின் போட்டவங்க 'கொண்டாடுற' மாதிரி வந்துள்ள ஒரு 'கிரேட்' நியூஸ்...! - அட, இதுக்கு மேல என்னங்க வேணும்...?
- டைம் 'வேஸ்ட்' பண்ற ஒவ்வொரு 'நொடியும்' ஆபத்து...! 'ப்ளீஸ், ஏதாவது உடனே பண்ணுங்க...' 'இவங்கள' நியாபகம் இருக்கா...? - தற்போது வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்...!
- 'கோவாக்சின்' போட்டவங்க 'பட்டாசு' வெடிச்சு கொண்டாடுங்க...! இந்த 'ஹேப்பி நியூஸ்'காக தானே இத்தனை நாளா காத்திருந்தோம்...! - அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்...!
- வெளிநாடுகளை 'மிரட்டி' வந்த ஏ.ஒய்.4.2 ரக கொரோனா... கடைசியில நம்ம 'பக்கத்து மாநிலத்துக்கே' வந்துடுச்சு...! - உறுதி செய்த சுகாதாரத் துறை...!
- 'விசா வந்தா கடனை அடைக்கலாம்'... 'எதிர்பார்ப்பில் இருந்த இந்தியர்கள்'... இந்த நேரத்தில் வந்த அபுதாபி இளவரசரின் அதிரடி அறிவிப்பு!
- 'Sorry, கோவிஷீல்டு போட்டாலும்'... 'விசா எடுத்து, பிளைட் ஏறிவந்த இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நாடு'... திருப்பி பதிலடி கொடுத்த இந்தியா!
- 'நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி'... 'தனிமைப்படுத்தப்பட்ட 6 வீரர்கள்'... 'போட்டிகள் ரத்தாகுமா'?... வெளியான முக்கிய தகவல்!
- '2019-ல் விளையாட்டு வீரர்களுக்கு வந்த மர்ம நோய்'... 'சீனா எப்போ இந்த பயங்கரத்தை செஞ்சுது'?... 'இத சொல்லல என் மனசாட்சி சும்மா விடாது'... நெஞ்சை உலுக்கும் தகவல்!
- மூணே 'மூணு' நாள் தான்...! 'எல்லாம் சரி ஆயிடும்...' 'போர்டு எழுதி வைத்த நபர்...' 'குவிந்த பொதுமக்கள்...' - வீட்டை 'சோதனையிட்ட' போது காத்திருந்த அதிர்ச்சி...!