“இனவெறியால் சங்கடமாயிடுச்சு! அதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு!”... பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் எடுத்த ‘அதிர்ச்சி’ முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டன் தொழிலாளர் கட்சியில் இருந்து 49 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணரும் கோடீஸ்வரருமான மேக்நாத் தேசாய் அதிரடியாக விலகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவராக 80 வயதான மேகநாத் தேசாய் விளங்கினார். சுமார் 5 மில்லியன் டாலர் வரை அவருடைய சொத்து மதிப்பு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில் இவர் மேக்நாத் பிரபுக்கள் சபையில் உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில்தான் தொழிலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி முதல் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சிக்குள் தலைதூக்கிய இனவெறியைத் தடுக்க முயற்சிக்காமல், கட்சித் தலைமை தோல்வி அடைந்ததாகவும் அதனால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கட்சித் தலைமையோ அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ள நிலையில் அவர் பிரபுக்கள் சபை தொழிலாளர் கட்சி தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

இதுபற்றி பேசிய அவர், “இதுவரை தொழிலாளர் கட்சியின் ஆதரவாளராக மட்டுமே இருந்தேன், ஆனால் கட்சியின் முன்னாள் தலைவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நாட்டின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கண்டுபிடித்து, அவர் 19 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனால் 49 ஆண்டுகளுக்கு பிறகு நான் கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறேன். எந்த மன்னிப்பும் இல்லாமல் அவரை கட்சி திரும்ப ஏற்றுக் கொண்டுள்ளது. கட்சியில் அவர் இப்போது சேர்க்கப்பட்ட இந்த விசித்திரமான முடிவு எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. யூதர்கள் மோசமாக நடத்தப்பட்டனர். பெண் உறுப்பினர்கள் கிண்டல் செய்யப் பட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்