இலக்கியத்துக்கான நோபல் பரிசு.. உலகத்தை தன் எழுத்தால் அசைத்துப் பார்த்த அனி எர்னாக்ஸ்.. யாருப்பா இவங்க..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்த வருடத்தின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அனி எர்னாக்ஸ் என்பவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து உலகம் முழுவதிலும் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார் அனி.

Advertising
>
Advertising

Also Read | ஆத்தாடி பயங்கரமான திருவிழாவா இருக்கும் போலயே.. 23 கிராம மக்கள் ஒன்றுசேரும் வினோத தடியடி திருவிழா.. சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்..!

நோபல் பரிசு

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் மற்றும் மருத்துவம் ஆகிய பிரிவுகளின் கீழ் நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக 3ம் தேதி அன்று மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஸ்வான்டே பாபோ என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்விற்காக ஸ்வான்டே பாபோவிற்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கடந்த நான்காம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனை பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கர் ஆகியோர் பெறுகின்றனர். போட்டான் எண்டாங்கிள்மெண்ட் குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் அறிவிக்கப்பட்டது. 

வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி,டென்மார்க்கின் மார்டென் மெல்டால் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரி குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த எழுத்தாளரான அனி எர்னாக்ஸ் என்பவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனி எர்னாக்ஸ்

வடக்கு பிரான்ஸை சேர்ந்த நார்மாண்டியின் Yvetot எனும் சிறிய நகரத்தில் கடந்த 1940 ஆம் ஆண்டு பிறந்தவர் அனி. இவரது பெற்றோர் நார்மாண்டியில் உணவகம் ஒன்றை நடத்திவந்தனர். இளம்பருவத்தில் வேலைக்காக லண்டனுக்கு பயணித்த அனி, தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை மையமாகக்கொண்டு எழுத துவங்கினார். 1974 ஆம் ஆண்டு Les Armoires vides எனும் புத்தகம் மூலமாக இலக்கிய உலகில் கால்பதித்தார் இவர். பாலின வேறுபாட்டுக்கு எதிராக தொடர்ந்து தைரியமாக எழுதி வந்ததாக நோபல் கமிட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது. இதுவரை 20 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அனி எழுதியிருக்கிறார் இவற்றில் பல பிரான்சில் பள்ளி பாட புத்தகங்களாகவும் உள்ளன. நவீன பிரான்ஸ் குறித்த ஆழமான பார்வையை எழுத்தின் மூலம் பதிவு செய்தவர் இவர். இந்நிலையில் அணி எர்னாக்ஸ்-க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது அவரது வாசகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | ரூ.360 கோடியில் கட்டப்படும் பிரதமருக்கான பிரம்மாண்ட குடியிருப்பு வளாகம்.. 3 இடங்களை இணைக்க சுரங்கப்பாதைகள்.. பிரம்மிக்க வைக்கும் வசதிகள்..!

FRENCH AUTHOR, FRENCH AUTHOR ANNIE ERNAUX, NOBEL PRIZE, LITERATURE, NOBEL PRIZE 2022, நோபல் பரிசு, அனி எர்னாக்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்