"இவருதான் உலகத்தையே ஒரு வழி பண்ணவரு..." "அக்யூஸ்டின் துல்லிய புகைப்படம் இதுதான்..." 'புகைப்படத்தை' வெளியிட்டது 'ஃபிரான்சின்' 'INSERM நிறுவனம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸின் முதல் புகைப்படத்தை ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான INSERM வெளியிட்டுள்ளது

கொரோனா வைரஸின் துல்லியமான புகைப்படத்தை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. கொவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரசுக்கு விஞ்ஞானிகள் Sars-CoV-2 என பெயரிட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தொற்றானது மூக்கு மற்றும் தொண்டை உள்ளிட்ட மேல் சுவாசக்குழாயில் இருக்கும் போது அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டால் மட்டுப்படுத்தப்படுகிறது. அதுவே, கீழ் சுவாசக்குழாயை தாக்கும் போது நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதாரம் மற்றும மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான Inserm (Institut national de la santé et de la recherche médicale) Covid-19 தொற்றுநோய்க்குக் காரணமான SARS-CoV-2 வைரசின் படத்தினை உலகில் முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

 

மனிதனின் சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் இந்த வைரசின் படத்தினைத் தனிமைப்படுத்தபட்ட கொரோனா நோயாளி ஒருவரிடமிருந்து பெற்றுள்ளனர். இந்த தகவலை Inserm நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த நோய்த் தொற்றால் தற்போது வரை சர்வதேச அளவில் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

CORONA, FRANCE, COVID 19, PICTURE, REVEALED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்