பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு பறந்து வந்து.. பெண்ணை கரம்பிடித்த 54 வயது நபர்.. வைரலாகும் திருமண வீடியோ!!
முகப்பு > செய்திகள் > உலகம்அவ்வப்போது இணையத்தில் ஏதாவது வீடியோக்கள் வெளியாகி, பல விதமான கருத்துக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருவது வழக்கமான ஒன்று தான்.
Also Read | "தரையில என் கால் பட்டாலே மயக்கம் வந்துடும்".. 23 மணி நேரம் படுக்கையில் கழிக்கும் பெண்.. வினோத காரணம்!!
அந்த வகையில், தற்போது சற்று வயதான நபர் ஒருவர் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டது தொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாகி பல விதமான கருத்துக்களும் இது தொடர்பாக பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த வீடியோ தொடர்பான உண்மையான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி பகுதியை சேர்ந்த பாக்ஸல் என்ற நபருக்கு தற்போது 54 வயதாகிறது. இவர் பிரான்ஸ் நாட்டில் குடி உரிமை பெற்று தனது நபர்களுடன் அங்கே வசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், புதுச்சேரிக்கு வந்திருந்த பாக்ஸல், தனது குடும்பத்தில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த 41 வயது பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த பாஸ்கல், அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு மீண்டும் பிரான்ஸ் கிளம்ப முடிவு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், சில பல காரணங்களால் அவர்கள் இருவரும் பிரான்ஸ் செல்ல தாமதமானதால், தற்போது வரை அவர்கள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
புதுச்சேரியில் உள்ள கோவில் ஒன்றில் இவர்கள் திருமணம் நடந்த நிலையில், சமீபத்தில் அவர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், பாஸ்கலின் திருமண வீடியோக்கள் பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி, 75 வயது நபர், சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை திருமணம் செய்ததாக இணையத்தில் தகவல் வெளியானது.
ஆனால், உண்மை காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ள நிலையில், இந்த ஜோடிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | நீச்சல் குளத்தில் விழுந்து தத்தளித்த தாய்.. ஓடிவந்து காப்பாற்றிய 10 வயது சிறுவன்.. நெகிழ வைத்த வீடியோ!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நீங்க வரலைன்னா சோறு மிச்சம்".. Trend ஆகும் திருமண அழைப்பிதழ்.. "சாப்பாடு, Gift பத்துன விஷயத்துக்கே லைக்ஸ அள்ளி போடலாம்"
- "ஓடுனா மட்டும் விட்டுடுவோமா?".. சாலையில் வாலிபரை துரத்திய இளம்பெண்.. "இப்படி பண்ணிட்டு போனா யாரு தான் துரத்த மாட்டாய்ங்க"
- "கட்டுனா அவர மட்டும் தான்".. 37 வயசு காதலனுக்காக.. பல வருசமா காத்திருந்த 70 வயது பெண்.. கடைசியில் நடந்தது என்ன??
- "கே எல் ராகுல் கல்யாணம் எப்போ?".. நடிகர் சுனில் ஷெட்டி பகிர்ந்த விஷயம்??.. வெளியான அதிரடி தகவல்!!
- கல்யாண Invitation-ஆ? இல்ல Meme-ஆ? வடிவேலு, பார்த்திபன்னனு ஒரே ரகளைதான்... அதுலயும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி அல்டிமேட்.. யாருய்யா இவரு
- கல்யாணத்துக்காக சேர்த்து வெச்ச ரூ.10 லட்சத்த எடுத்து ஊருக்கு ரோடு போட்ட தமிழ்நாடு ஐடி ஊழியர்.!
- சிசிடிவி காட்சிகள்.. புதரில் கிடந்த சூட்கேஸ்.. திருமணமான அதே நாள் இரவில் நடந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் பின்னணி!!
- கல்யாணத்து அன்னைக்கி சந்திச்ச அவமானம்.. மறுநாளே வேலை'ய ராஜினாமா பண்ண மணப்பெண்.. "அப்படி என்னய்யா நடந்துச்சு??"
- அக்காள் - தங்கை 3 பேருக்கும்.. ஒரே மேடை'ல நடந்த கல்யாணம்.. தமிழ்முறைப்படி திருமணம் செய்த French இளைஞர்கள்!!
- "வெளிநாடு போய் கல்யாணம் பண்ணிக்க போறோம்.." உற்சாகமா கிளம்பிய ஜோடி.. விமான நிலையத்தில் மாயமான பெண்?!.. அதிர்ச்சியில் வாலிபர்