100 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழிக்க ஃபிரான்ஸ் அரசு சபதம்... பார்த்தவுடன் தகவல் அளிக்க அவசர எண் அறிவிப்பு...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பீதியடைந்து வரும் நிலையில், ஃபிரான்ஸ் அரசு தற்போது விநோத பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. அந்த நாட்டில் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த மூட்டைப் பூச்சிகள் உடல் ஆரோக்கித்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கும் என்பதால் அதனை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீடு மற்றும் ஹோட்டல்களில் அதிக மூட்டைப் பூச்சிகளைக் கண்டால் உடனே தொடர்பு கொள்ளுமாறு அவசர எண்களை அறிவித்துள்ளது.

மூட்டைப் பூச்சிகள் ஒரு சில நாட்களில் பெருகிவிடும் என்பதால் இந்த அறிவிப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசுகேட்டுக் கொண்டுள்ளது. ஒரு இரவுல் 90க்கும் மேற்பட்ட முறை கடிக்கும் மூட்டைப் பூச்சிகள் கொசுக்களை போல் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அவை கடிக்கும் இடங்களில் தோல் சிவத்தல், அரிப்பு, வீக்கம் போன்றவை ஏற்படும். 100 நாட்களுக்குள் அனைத்து மூட்டைப் பூச்சிகளையும் ஒழிக்க வேண்டும் என ஃபிரான்ஸ் அரசு சபதம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FRANCE, EMERGENCY NUMBER, BEDBUG, GOVERNMENT, ANNOUNCED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்