'நாங்க குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டோம்'... 'ஏன் இந்த முடிவு'... பின்னணியில் இருக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மக்கள்தொகை 7.8 பில்லியனைத் தாண்டி விட்டது.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகவும், புவி வெப்பமாவதைத் தடுப்பதற்காகவும் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என பிரான்ஸ் நாட்டவர்கள் பலர் முடிவு செய்துள்ளார்கள். உலகின் மக்கள்தொகை 7.8 பில்லியனைத் தாண்டிவிட்ட நிலையில், உலகத்தின் வளங்களை ஏற்கனவே அதிகம் நாம் பயன்படுத்தியாயிற்று.

எனவே இன்னொரு வாடிக்கையாளரை இந்த உலகத்துக்கு ஏன் கொடுக்கவேண்டும் பிரான்ஸ் மக்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். புவிக்கு உதவும் வகையில், சுற்றுச்சூழல் காரணங்களுக்காகக் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

ஒருவரியில் தங்களை ‘childfree’ அல்லது ’green inclinations, no kids’ என்பதன் சுருக்கமாக ’ginks’ என இந்த கூட்டத்தினர் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். பிரான்சில், ஒவ்வொரு குழந்தையும், ஆண்டொன்றிற்கு 40 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதாகவும், கார்பன் டை ஆக்சைடு வெளியேறினால் புவி வெப்ப மயமாகும் என்றும் கூறும் இவர்கள், குழந்தையே பெற்றுக்கொள்ளப்போவதில்லை எனக் கூறியுள்ளார்கள்.

அதே நேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ளாத பெரியவர்களை நான் அறிந்ததில்லை, எனக்கும் குழந்தைகளில்லாத ஒரு வாழ்க்கை விருப்பமில்லை. ஆனால், நாம் அந்த குழந்தைகளுக்காக எப்படிப்பட்ட உலகத்தை விட்டுச் செல்கிறோம் என்று நம்மை நாமே கேட்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு உலகத்தைப் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை எனக் கூறியுள்ளார் பிரான்ஸ் இளைஞர் ஒருவர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்