வீடெல்லாம் பெருசா தான் இருக்கு.. ஆனா டாய்லெட் மட்டும் ஏன் இப்படி கட்டினாங்க? குழம்பி தவிக்கும் நெட்டிசன்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா: அமெரிக்காவின் ஒரு வீட்டில் குளியலறைக்குள் 4 டாய்லெட்டுகள் கொண்ட விசித்திர வீடு ஒன்று விற்பனைக்கு வந்துள்ள நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

டாய்லெட்:

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் தெற்கு மில்வாக்கியில் அமைந்திருக்கும் இந்த வீட்டில் 6 படுக்கையறைகள், இரண்டு முழு சிறப்பம்சம் கொண்ட குளியலறைகள், இரண்டு பாதிவசதி குளியறைகள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த வீட்டில் மிக பிரபலமானது டாய்லெட்டுகள் தான்.

ஏனென்றால் ஒரு வீட்டில் அதிகம் காணப்படுவது படுக்கையறைகள் தான். ஆனால் இங்கு அதிகம் காணப்படுவது டாய்லெட்டுகள். ஒன்றல்ல... இரண்டல்ல... ஒரு பாத்ரூமுக்கு 4 டாய்லெட்டுகள் இருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல், எந்த தடுப்பும் இல்லாமல் சில இஞ்ச் இடைவெளிகளே விடப்பட்டு நாற்காலிகள் போல் அமைக்கப்பட்டுள்ளனவாம்.

ஒரு குளியலறையில் 4 சிங்குகள்:

அதுமட்டுமில்லாமல் ஒரு குளியலறையில் 4 சிங்குகளும் இருக்கிறதாம். இந்த மாதிரியான குளியலறை அந்த வீட்டில் ஒரு பகுதியில் மட்டுமே இருக்கிறதாம். மற்ற அறையிலுள்ள குளியலறைகள் சாதாரணமாகத்தான் உள்ளன என கூறப்படுகிறது.

"இது தந்தையின் தாலாட்டு கண்ணே.." மகளுக்கு மூளையில் அறுவை சிகிச்சை.. பதிலுக்கு தகப்பன் செய்த செயலால் கலங்கும் நெட்டிசன்கள்

குளிரின் தாக்கம் இல்லாமல் இருக்க கூரைகள் பீம் செய்யப்பட்டுள்ளது:

இந்த விசித்திர, கம்பீரமான மில்வாக்கி வீடு 1851 ஆம் ஆண்டில் ஃபௌல் குடும்பத்தால் ஹாவ்தோர்ன் அவேயில் முதன்முதலில் கட்டப்பட்டது. அப்பகுதி மக்களிடையே பிரபலமான வரலாற்று சிறப்புமிக்க இந்த வீடு தற்போது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் அறைகள் மிகவும் விசாலமாகவும், தளங்கள் கடினத்தன்மையுடனும், வீட்டிற்குள் குளிரின் தாக்கம் இல்லாமல் இருக்க கூரைகள் பீம் செய்யப்பட்டு கட்டியுள்ளனர்.

அனைத்தும் நவீன முறையில் வடிவமைப்பு:

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்த வீட்டின் சமையலறை மற்றும் குளியலறைகளில் பிளம்பிங், மின்சாரம், உபகரணங்கள் போன்ற அனைத்தும் நவீன முறைக்கு ஏற்ப மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீட்டிற்கு அருகே வேறு வீடுகள் இல்லாமல் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

பக்கத்து வீட்டு காரர் இப்படி செய்யலாமா... பாவம் தாய் கோழி... நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற சிறுமி!

முதன்முதலில் இந்த வீட்டை கட்டும்போது 4 டாய்லெட்டுகள் இல்லை எனவும், 1920 அல்லது 1930களில் இந்த வீட்டில் வாழ்ந்த கிர்ல் ஸ்கௌட் தான் இந்த டாய்லெட்டுகளை வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

FOUR TOILETS IN THE BATHROOM OF A HOUSE, AMERICA, அமெரிக்கா, டாய்லெட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்