'எங்க அடி ஒண்ணொண்ணும் இடி போல இருக்குதா'?... 'அமெரிக்கா விடுவித்த கொடூர கைதிகள்'... கொஞ்சமும் யோசிக்காமல் தாலிபான்கள் செய்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரருக்குப் பதிலாக 4 கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த நேரத்தில், தாலிபான்களின் நேசப்படைகளான ஹக்கானி குழுவினரால் 2009ல் சிறைபிடிக்கப்பட்டவர் அமெரிக்க ராணுவ வீரரான Bowe Bergdahl. இவர் 2014 வரையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஹக்கானி படைகளின் கட்டுப்பாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து கடந்த 2014ல் ஒபாமா நிர்வாகம் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது ராணுவ வீரர்  Bowe Bergdahlயை விடுவிக்கத் தாலிபான்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 தாலிபான் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஒபாமா 4 தீவிரவாதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டார்.

தற்போது அவர்கள் நால்வருக்கும் தாலிபான்கள் அமைக்கவிருக்கும் ஆட்சியில் முக்கிய பதவிகளை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முகமது நபி ஓமாரி, கைருல்லா கைர்க்வா, நோருல்லா நூரி, அப்துல் ஹக் வசிக் மற்றும் முகமது ஃபாஸ்ல் ஆகியோருக்கு தாலிபான்கள் முக்கிய பொறுப்புகளை அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கொடூர தீவிரவாதிகளுக்குத் தாலிபான்கள் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தாலிபான்களின் புதிய அமைச்சரவையில் இடைக்கால உள்விவகார அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் சிராஜுதீன் ஹக்கானி தலைக்கு அமெரிக்க நிர்வாகம் 10 மில்லியன் டாலர் வெகுமதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்