அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது அடுக்கப்பட்ட 34 குற்றச்சாட்டுகள்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவர் தன்னுடன் தொடர்பில் இருந்ததாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தெரிவித்து இருந்தார். இது அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த விஷயத்தை மறைக்க அவர் சுமார் 1.07 கோடி ரூபாயை ஸ்டார்மி டேனியல்ஸ்-க்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் ட்ரம்ப் தன்னுடைய தேர்தல் செலவாக இந்த தொகையை கணக்கு காட்டியதாக சொல்லப்படுகிறது. அமெரிக்க சட்டதிட்டங்களின் அடிப்படையில் தேர்தல் நிதியை வேறு காரியத்திற்கு பயன்படுத்தியதாக பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது

இந்த வழக்கு மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் ட்ரம்ப் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கு மத்தியில் அமெரிக்க நேரப்படி நேற்று மதியம் 2.30 மணிக்கு மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் சரணடைந்தார் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு காவல்படையினர் சூழ வருகை தந்த ட்ரம்ப் நீதிமன்ற விசாரணையில் ஆஜரானார்.

Images are subject to © copyright to their respective owners.

நீதிபதி ஜூவான் மெர்ச்சான் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் ட்ரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அப்போது தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மட்டுமே ட்ரம்ப் தெரிவித்தார். இதனையடுத்து நீதிமன்ற விசாரணைக்கு அவர் சுதந்திரமாக அனுமதிக்கப்படுவார் என குறிப்பிட்டு பிணை வழங்கினார் நீதிபதி ஜூவான். இதனிடையே மான்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு வெளியே ட்ரம்பின் ஆதரவாளர்கள் திரண்டனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவர் பிணையில் விடுக்கப்பட்ட சம்பவம் அந்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

DONALD TRUMP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்