நாட்டைவிட்டு தப்பிக்க முயன்ற உக்ரைன் முன்னாள் எம்பியின் மனைவி.. சூட்கேஸை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவருடைய மனைவி ஏராளமான பணத்துடன் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்திருக்கிறார்.

Advertising
>
Advertising

உக்ரைன் போர்

ஐரோப்பிய கூட்டமைப்புடன் இணையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது உக்ரைன் அரசு. இதற்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இதனை அடுத்து ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரசில் பயிற்சிக்கு என குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்களை உக்ரைனுக்குள் நுழைய உத்தரவிட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதனை அடுத்து உக்ரைனின் வான், தரை மற்றும் கடல் வழியாக தாக்குதலை தொடங்கியது ரஷ்ய ராணுவம்.

வெளிறிய மக்கள்

ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரவே, உக்ரைன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதுவரையில் 6.8 மில்லியன் உக்ரைன் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்நாட்டிலேயே பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான பிரிவு தலைவர் தெரிவித்து உள்ளார்.

போர் காரணமாக இதுவரையில் சுமார் 3.3 மில்லியன் உக்ரைன் மக்கள் போலந்து, ஸ்லோவேக்கியா, மால்டோவா, ஹங்கேரி ஆகிய அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்து உள்ளது.

 

முன்னாள் எம்பியின் மனைவி

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் முன்னாள் எம்பியின் மனைவி ஒருவர் நேற்று நாட்டை விட்டு தப்பிக்க முயன்றுள்ளார். உக்ரரைனின் அண்டை நாடான ஹங்கேரியின் ஜகர்பாட்டியா வழியாக அந்தப் பெண்மணி தப்பிக்க முயற்சிக்கையில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அப்போது முன்னாள் எம்பியின் மனைவி வைத்திருந்த பைகளை சோதனைக்கு உட்படுத்தி உள்ளது காவல்துறை.

பணம்

எல்லையோர காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, அந்தப் பெண்மணியின் பைகளில் ஏராளமான பணம் இருப்பதை கண்டறிந்து உள்ளனர். அந்தப் பைகளில் 28 மில்லியன் டாலர்கள் மற்றும் 1.3 மில்லியன் யூரோ பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதனை அடுத்து, இதுகுறித்து பொது வெளியில் அறிவிக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டதாக NEXTA ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்திவரும் தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில், 28 மில்லியன் டாலர்கள் மற்றும் 1.3 மில்லியன் யூரோ பணத்துடன் உக்ரைன் முன்னாள் எம்பி மனைவி தப்பிக்க முயன்று காவல்துறையிடம் சிக்கியது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

UKRAINE, RUSSIA, WAR, MPWIFE, உக்ரைன், ரஷ்யா, போர், எம்பியின்மனைவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்