விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த முட்டை.. பலரையும் ஆச்சரியமூட்டும் ரிசல்ட்!!..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பூமியில் பல ஆச்சரியங்கள் மற்றும் விநோதங்கள் நிறைந்திருப்பது போல, வான் வெளியிலும் வியப்பு நிறைந்த விஷயங்களும், பலரை திகைக்க வைக்கக் கூடிய சம்பவங்களும் நிறைந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பைக் டாக்ஸியில் நம்பி ஏறிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.? தென்னிந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்.!

இது தொடர்பாக நாசா உள்ளிட்ட உலகின் பல விண்வெளி நிலையங்கள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டும் அதன் முடிவுகளை வெளியிட்டும் வருகிறது.

சமீபத்தில் கூட நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் கூட பெரிய அளவில், அறிவியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே போல, செவ்வாய் கிரகம் குறித்தும் அவ்வப்போது சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

அப்படி ஒரு சூழலில், முன்னாள் நாசாவின் என்ஜீனியர் தற்போது செய்து பார்த்த பரிசோதனை தொடர்பான செய்தி ஒன்று, பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது. Mark Rober என்ற நபர் நாசா மற்றும் ஆப்பிள் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது பல பரிசோதனைகள் மேற்கொண்டு அதன் முடிவுகளை வீடியோக்களாக வெளியிட்டு வரும் மார்க் ரோபர், விண்வெளியில் இருந்து பூமிக்கு முட்டை ஒன்றை வீசி பார்த்துள்ளார்.

பொதுவாக, முட்டை என்பது சில சென்டிமீட்டர்கள் தூரத்தில் இருந்து போட்டாலே உடைந்து போய் விடும். அப்படி இருக்கையில், முதலில் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் இருந்து முட்டையை கீழே போட முடிவு செய்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அதனை மாற்றிய மார்க், விண்வெளியில் இருந்து முட்டையை வீச முடிவு செய்துள்ளார்.

இதற்காக தனது குழுவினருடன் பல மாதங்களாக பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு வந்த மார்க் ரோபர், கடைசியில் விண்வெளியில் இருந்து முட்டையை கீழே போடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இந்த பரிசோதனையின் நோக்கம் என்பது, பூமியில் முட்டை விழும் போது பாதுகாப்பான மேற்பரப்பில் விழுந்து உடையாமல் இருக்க வேண்டும் என்பது தான்.

அப்படி இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, விண்வெளியில் இருந்து முட்டையும் கீழே விழுந்தது. இந்த முயற்சியின் முடிவில், முட்டை உடையாமல் மண்ணில் செலுத்தப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதற்காக சிறிய பாராசூட் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்த நிலையில், பரிசோதனையின் முடிவுகளும் வெற்றியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்க் ரோபர் பகிர்ந்த இந்த வீடியோ தற்போது பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகியும் வருகிறது.

Also Read | “200 கார்.. 20 மாடிலாம் வேணாம்.. டைரக்ட் பண்ணிட்டு இருக்கும்போதே செத்துரணும்..” மிஷ்கின் உருக்கம்.!

NASA, NASA ENGINEER, EGG, SPACE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்