'சாதாரண வீக்கம் தானேன்னு கேஷுவலா இருந்த இளைஞர்'... 'பரிசோதனைக்கு போன இடத்தில்'... கொப்பளம் மூலம் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காலில் ஏற்பட்ட வீக்கத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொண்ட இளைஞருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

இங்கிலாந்து நாட்டின் Norfolkயை சேர்ந்தவர் லீவிஸ் ஆல்ப். கால்பந்து பயிற்சியாளராக இருக்கும் இவர் தினமும் தீவிர பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்தநிலையில் சமீபத்தில் அவரது காலில் கொப்பளம் ஒன்று ஏற்பட்டது. தினமும் பயிற்சி செய்வதால் பயிற்சியின்போது ஏதாவது அடி பட்டிருக்கும் என லீவிஸ் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.

பின்னர் சில நாட்கள் கழித்து அவருக்குப் பயங்கரமான காய்ச்சல் ஏற்பட்டது. அதோடு கடுமையான உடல் வலி மற்றும் கால் வலியும் ஏற்பட்டது. ஒரு வேளை தனக்கு கொரோனா பாதிப்பு தான் வந்து விட்டதோ என எண்ணிப் பயந்துபோன லீவிஸ், உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது தான் அவருக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியவந்தது.

ஆம், லீவிஸ்க்கு ஏற்பட்ட வீக்கத்திற்குக் காரணம் கால்பந்தாட்ட பயிற்சி அல்ல, 'false widow' என்ற கொடிய விஷம் கொண்ட சிலந்தி என்பது தெரிய வந்தது. இதனால் தான் லீவிஸ்க்கு காலில் வீக்கம் ஏற்பட்டு சீழ் பிடித்தது. அதோடு அவருக்கு பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கே லீவிஸ் சென்றிருக்கிறார்.

தற்போது பிரச்சினையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அவர் வருங்காலத்தில் பயிற்சியின் போது சிலந்திகள் கடிக்காமல் இருக்க முழங்கால் உயர சாக்ஸ் அணிய இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் தனக்கு ஏற்பட்டது போல உடலில் யாருக்காவது ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் முறையான பரிசோதனை செய்யாமல், எந்த முடிவுக்கும் வராதீர்கள் என லீவிஸ் ஆல்ப் எச்சரித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்