Food ஆர்டர் செய்த கஸ்டமர் எழுதிய வாசகம்.. மின்னல் வேகத்தில் பறந்த டெலிவரி மேன்.. அப்படி என்ன ‘எழுதி’ இருந்தார் தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இதுதான் என் வாழ்வின் கடைசி உணவு என வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டு உணவு ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வாடிக்கையாளர் ஒருவர் உணவை டெலிவரி செய்யும் ஆன்லைன் தளத்தில் உணவை ஆர்டர் செய்துள்ளார். அதில், ‘என் வாழ்க்கையின் கடைசி உணவு இதுதான்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து உணவை எடுத்துக்கொண்டு டெலிவரி செய்யும் நபர், ஆர்டர் செய்தவரின் வீட்டுக்கு வேகமாக சென்றுள்ளார். நீண்ட நேரமாக அவரது வீட்டின் அழைப்பு மணியை அடித்தும் அவர் பதிலளிக்கவில்லை. மேலும் கதவும் பூட்டி இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த டெலிவரி செய்யும் நபர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து தீயணைப்புப் படையினருடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போதும் அந்த நபர் கதவை திறக்க மறுத்துவிட்டார். உடனே போலீசார் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். கதவை திறந்தால் ஜன்னல் வழியாக குதித்து விடுவேன் என அந்த நபர் மிரட்டியுள்ளார். இதனை அடுத்து அவரை தீயணைப்புப் படையினர் சமாதானம் செய்து கதவை திறந்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வரும் முன்பே அவர் 60 தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வாடிக்கையாளரின் உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றிய டெலிவரி செய்த நபருக்கு போலீசார் மற்றும் மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

FOOD, DELIVERYBOY, CHINA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்