'அவரே பேசிகிட்டு இருந்தார்...' 'நான் பேசுறத ஸ்டாப் பண்ண ட்ரை பண்ணினார்...' 'ஆனா கடைசில ஒண்ணு மட்டும் சொன்னேன்...' ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் சகோதரர் பேட்டி...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் சகோதரரிடம் ஆறுதல் கூறியுள்ளதாக ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, ஃப்ளாய்ட்டின் சகோதரர் ட்ரம்ப் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார் நான் பேசுவதை கேட்க அவர் தயாராக இல்லை என எதிர் பேட்டி அளித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

Advertising
Advertising

42 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் இருக்கும் மின்னெபொலிஸ் நகரில், பட்டப்பகலில் போலீசாரால் கழுத்தில் கால் வைத்து கொல்லப்பட்டார். அவர் போலீசாரிடம் என்னால் மூச்சு விட முடியவில்லை என்று கெஞ்சிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி ஜார்ஜ் ஃப்ளாய்ட்டிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. ஐ காண்ட் பிரேத் என்ற ஹாஷ்டாக்கும் ட்ரென்ட் ஆகியது.

மாபெரும் போராட்டமாக அமைதியான முறையில் நடைபெற்ற நேரத்தில் திடீரென கலவரம் வெடித்ததால் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்திக் கூட்டத்தைக் கலைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்னர் ஜார்ஜ் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜார்ஜின் குடும்பத்தினரை போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட ட்ரம்ப் 'நான் அவர்களிடத்தில் என் துக்கத்தை வெளிப்படுத்தினேன். இது ஒரு சோகமான மற்றும் பயங்கரமான விஷயம் இதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை என்றே தோன்றுகிறது ' என கூறியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஜார்ஜின் சகோதரர் பிலோனிஸ் ஃபிகாய்டின், ட்ரம்ப் உடனான எங்கள் உரையாடல் சரியாக நடக்கவில்லை எனவும், 'ட்ரம்ப் தனது கருத்துகளை மட்டுமே கூறினார். அதிபர், நான் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கூடக் கொடுக்கவில்லை. அவருடனான உரையாடல் மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும் நான் அவரிடம் பேச முயன்றேன், ஆனால் அவர், 'நீங்கள் பேசுவதைக் கேட்க எனக்கு விருப்பமில்லை' என்பது போலவே நடந்துகொண்டு என் பேச்சை நிறுத்த மட்டுமே முயற்சி செய்தார்' என MSNBC ஊடகத்தினரிடம் பேசியுள்ள பிலோனிஸ் கூறினார்.

மேலும், பட்டப்பகலில் என் சகோதரனைக் கொலை செய்துள்ளனர். இதை என்னால் நம்பவே முடியவில்லை, எங்களுக்கு நீதி வேண்டும் என நான் அதிபரிடம் கூறினேன். அவ்வளவுதான் என்னால் பேச முடிந்தது' எனக் கூறியுள்ளார் ஜார்ஜின் சகோதரர்.

மேலும் முதன்முறையாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோபிடனிடம் என் சகாதாரருக்கு நீதி வேண்டும் என கெஞ்சினேன் என பிலோனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்